Times of Puducherry
பாரதப் பிரதமர் அவர்களின் 25 ஆண்டுகால அற்பணிப்பான மக்கள் சேவையை போற்றும் வகையில், புதுச்சேரி மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக ‘விக்ஸித் பாரத்’ (வளர்ச்சியடைந்த பாரதம்) என்ற தலைப்பில் மையமாக வைத்து கட்டுரை, கவிதை மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டன.
இப்போட்டிகளில் தங்களது சிறப்பான திறமைகளை வெளிப்படுத்தி வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு, வில்லியனூர் அன்னை லூர்து மகாலில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் பரிசுகளும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் மற்றும் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
மேலும், நிகழ்ச்சியின் பொறுப்பாளர்கள் மற்றும் பல்வேறு பள்ளிகள், கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் பெருமளவில் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.
நாட்டின் எதிர்காலத் தூண்களான இளைய சமுதாயத்திடம் தேசப்பற்றையும், வளர்ச்சியடைந்த பாரதம் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் இத்தகைய முன்னெடுப்புகள் நமது நாட்டை மேலும் உயரத்திற்குக் செல்லும் என பாஜக தலைவர் ராமலிங்கம் கூறினார்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.