Times of Puducherry
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் கோவிந்தராசு (வயது 46). இவர் கடந்த 12ஆம் தேதி தனது நண்பர் மகாதேவன் என்பவரிடம் திருப்பூரில் இருந்து மங்களூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் திருச்சி கோட்டை ரயில் நிலையம் வந்தடைந்தார்.
பின்னர் இருவரும் அங்குள்ள நடைபாதையில் சென்றபோது, மூன்று மர்ம ஆசாமிகள் குடிபோதையில் அரிவாளால் தாக்கினர். இதில் இருவருக்கும் காயம் ஏற்பட்டது இது தொடர்பாக திருச்சி ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து திருச்சி வாமடம் பகுதியைச் சேர்ந்த தங்க குமார் (வயது 27) என்பவரை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த வாமடம் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் என்கிற எலி மாரியப்பன் (வயது 23 ) என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். மூன்றாவது நபர்ரை போலீசார் தேடி வருகின்றனர்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.