Times of Puducherry
புதுவை பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறை, சார்பில் “இந்திய ஒப்பந்தத் தொழிலாளர் புலம்பெயர் சமூகமும் விக்சித் பாரத் 2047-க்கான பாதையும்” என்று தலைப்பில் ஒரு நாள் சர்வதேச கருத்தரங்கை நடத்தியது.
துறைத் தலைவர் முனைவர் பாகோலால் ஹோகிப் வரவேற்புரை ஆற்றியதோடு கருத்தரங்கின் நோக்கங்களை எடுத்துரைத்தார். துணை வேந்தர் முனைவர் பிரகாஷ் பாபு பேசியதாவது:இந்தியாவின் விக்சித் பாரத் 2047 என்ற தொலைநோக்குப் பார்வைக்குப் பொருத்தமான இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்தமைக்காக, துறைத் தலைவரையும் பேராசிரியர்களையும் அவர் பாராட்டினார்.
பிரவாசி பாரதிய சம்மான் விருது பெற்றவரும், மொரிஷியஸிலிருந்து நெடுந்தூரம் பயணம் செய்து வந்தவருமான சிறப்பு விருந்தினர் முனைவர் சரிதா பூதூவை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:
இந்தியப் புலம்பெயர் சமூகத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் தனக்குள்ள தனிப்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதோடு, ஒருவரின் வேர்களுடனும் அடையாளத்துடனும் தொடர்பைத் தக்கவைத்துக் கொள்வதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார். மேலும் புலம்பெயர் சமூக ஆய்வுகளுக்கென ஒரு பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கான ஆலோசனையை முன்வைத்த அவர் ஒப்பந்தத் தொழிலாளர் புலம்பெயர் சமூகத்திற்கான தரவுத்தளங்களை உருவாக்குவதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தினார். இம் முயற்சி அவர்களின் முன்னோரின் வேர்களையும் , பூர்வீகத்தையும் கண்டறிய உதவும். புலம்பெயர் சமூக ஆய்வுகளில் அறிவு உருவாக்கச் செயல்முறையில் இளம் மாணவர்கள் பங்கேற்க வேண்டும் என்று அவர் வலியுறுத்திய அவர்,கடந்த காலத்தை அறிந்துகொள்வது, விக்சித் பாரத் 2047 தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும் என்று மாணவர்களிடம் தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார், இறுதியாக அவர் தமது “கீத் கவாய்” என்ற நூலைத் துணைவேந்தருக்கும் முதன்மையருக்கும் வழங்கினார்
1828-ஆம் ஆண்டில் புதுச்சேரியிலிருந்து (ஏனாம்) லா ரீயூனியன் தீவுக்கு 15 இந்தியர்கள் முதன்முறையாகப் பயணம் மேற்கொண்டதால், ஒப்பந்தத் தொழிலாளர் தொடர்பான விவாதத்தில் புதுச்சேரிக்குள்ள முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார். புதுவைப் பல்கலைக்கழகத்தின் பண்பாட்டு மற்றும் மரபு மையத்தில் ஒப்பந்தத் தொழிலாளர் புலம்பெயர் சமூகத்தின் நினைவுச் சின்னம் அமைந்துள்ளது.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.