Times of Puducherry
இசையமைப்பாளர் தேவா ஆத்மா சாந்தியடைய வேண்டும். தேவாவின் இசையைப்போல் ரஜினிக்கு வேறு யாரும் பொருந்தவில்லை என்று தான் ரசிகர்கள் பேசுவார்கள் என கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் பக்கத்தில் கவிதை எழுதி உள்ளார்.
சாவாப் பாடல்கள் தந்த தேவா மறைந்துவிட்டார். தேனிசைத் தென்றல் நின்று போயிற்றா? நெஞ்சு கனக்கிறது. தன் பேச்சு மூச்சுஅனைத்திலும் இசையாகவே இருந்தவர் சங்கீதத்தோடு இங்கிதம் தெரிந்தவர். பண்ணிசைக்கத் தெரிந்த பண்பாளர்.
அவரோடு நான் பணியாற்றிய அண்ணாமலை, பாட்ஷா, அருணாசலம், வாலி, குஷி, நேருக்கு நேர், ஆசை, பஞ்ச தந்திரம் முதலியநூற்றுக்கணக்கான படங்களின் பாட்டு வெற்றிக்கு தேவாவே காரணம்
தேவாவின் இசையைப்போல் ரஜினிக்கு வேறு யாரும் பொருந்தவில்லை என்றுதான் ரசிகர்கள் பேசுவார்கள் என்ன சொல்வது?எனக்கு என் விரல்களில் ஒன்று போய்விட்டது. அவரை இழந்துவாடும் குடும்பத்தார்க்கும் ரசிகர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கல்.கவலைப்படாதே சகோதரா என்று பாடியவனே! இன்று நான் கவலைப்படாமல் என்ன செய்ய?.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.