Times of Puducherry

மின் மாற்றியை பயன்படுத்தி மின்வெட்டு பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு - வையாபுரி மணிகண்டன் முயற்சி

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
10 Oct 2026 • 7:41 PM
uninterrupted-power-supply-muthialpet-vaiyapuri-manikandan

புதுச்சேரி முத்தால்பேட்டை பகுதியில் அடிக்கடி மின்வெட்டு, எம் எல் ஏ வையாபுரி மணிகண்டன் முயற்சியால் 12 லட்சத்தில் புதிய மின்
மாற்றியை திறந்து வைத்தார். புதுச்சேரி மாநில முத்தியால்பேட்டை தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. .வையாபுரி மணிகண்டன் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

புதுச்சேரி முத்தியால்பேட்டை தொகுதியில் மின்தடை பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், சட்டமன்ற உறுப்பினர் த.வையாபுரி_மணிகண்டன் பதவியேற்ற நாள் முதல் தொடர்ந்து தீவிர முயற்சி மேற்கொண்டார்.

இதன் பயனாக முத்தியால்பேட்டை- பாரதிதாசன் வீதியில் உள்ள பாரதிதாசன் SS- II மின்மாற்றியை ரூ.12 லட்சம் செலவில் 200 கிலோவாட் திறனிலிருந்து 315 கிலோவாட் திறன் கொண்டதாகவும், கருவடிக்குப்பம் பிரதான சாலையில் உள்ள சவரப்பேட் SS-3 மின்மாற்றியை ரூ.20 லட்சம் செலவில் 315 கிலோவாட் திறனிலிருந்து 630 கிலோவாட் திறன் கொண்டதாகவும் மாற்றி அமைத்தார். மேலும் ரூ.4 லட்சத்தில் மினி பில்லரும் அமைக்கப்பட்டது. புதிதாக திறன் அதிகரிக்கப்பட்ட மின்மாற்றிகள், மினி பில்லர் திறப்பு விழா மற்றும் முத்தியால்பேட்டை ரொசாரியோ வீதியில் புதிதாக புதைவட கேபிள்களை மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கும் விழா நடந்தது.

முத்தியால்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வையாபுரி மணிகண்டன் மின்மாற்றிகளை இயக்கி வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார். நிகழ்ச்சியில் மின்துறை கண்காணிப்பு பொறியாளர் செந்தில்குமார், செயற்பொறியாளர் திலகராஜ், இளநிலை பொறியாளர் செல்வமுத்தையன் மற்றும் மின்துறை ஊழியர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், கூட்டணிக் கட்சித் தோழர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.

 

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top