Times of Puducherry

திருச்சி மாநகராட்சி 35வதுவார்டில் குறுங்காடு திட்டம்; மாநகராட்சி ஆணையர் பொன்மணி தொடங்கி வைப்பு

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
17 Oct 2026 • 7:30 PM
trichy-35th-ward-micro-forest-scheme-intro-municipal-commissioner

திருச்சி மாநகராட்சி மண்டலம் 3, வார்டு எண்35 அகிலாண்டேஸ்வரி நகரில் 2023 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இப்பூங்காவில் 5000 மரக்கன்று நடும் சிறப்பு குறுங்காடு திட்டத்தை மாநகராட்சி ஆணையர் பொன்மணி தொடங்கி வைத்தார்.

திருச்சி மாநகராட்சிக்கு சொந்தமான 2023 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இப்பூங்காவில் சிறப்பு குறுங்காடு மரக்கன்று நடும் திட்டத்தின் கீழ் மொத்தம் 5000 மரக்கன்றுகள் வழங்கினார் . இதில் 26 வகையான நிழல்தரும் மரங்கள், பூக்கும் மரங்கள், பழம்தரும் மரங்கள் மற்றும் சுற்றுச் சூழலுக்கு உகந்த முறையில் நடவு செய்யப்பட்டன.

திருச்சி மாநகராட்சி 35வதுவார்டில் குறுங்காடு திட்டம்; மாநகராட்சி ஆணையர் பொன்மணி தொடங்கி வைப்பு

நடவு செய்யப்பட்ட அனைத்து மரக்கன்றுகளுக்கும் செட்டு நீர் பாசன வசதி, பாதுகாப்பு வேலி, மற்றும் முறையான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும், திருச்சி மாநகரில் நகர்ப்புற வெப்பத்தைக் குறைக்கவும், காற்று மாசுபாட்டைத் தவிர்க்கவும் ஜப்பானிய மியாவாகி முறையில் அடர்ந்த குறுங்காடுகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. மாநகராட்சி மற்றும் தன்னார்வலர்களின் கூட்டு முயற்சியால் இப்பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

திருச்சி மாநகராட்சி 35வதுவார்டில் குறுங்காடு திட்டம்; மாநகராட்சி ஆணையர் பொன்மணி தொடங்கி வைப்பு

மாநகரின் 5 மண்டலங்களில் உள்ள பூங்காக்கள், சாலையோர பகுதிகள், ஆற்றுக்கரை பகுதிகள் ,கரையோ பகுதிகள் மாநகராட்சி பொது இடங்கள் மற்றும் பல பகுதிகளில் இந்த அடர்வன காடுகள் உருவாக்கப்படுகின்றன.

மரங்களின் வகைகள்: வேம்பு, பூவரசு, புங்கை, இலுப்பை, நாவல் , நெல்லி போன்ற உள்நாட்டு மரக்கன்றுகள் அதிகளவில் நடப்படுகின்றன வழக்கமான முறையை விட பத்து மடங்கு வேகமாக வளர்ந்து இயற்கையான காடாக இது மாறுகிறது, சுற்றுச்சூழலை பாதுகாக்க இது உருவாக்கப்படுகிறது. இதே போல மாநகராட்சி பகுதிகளில் அதிக அளவு மரக்கன்றுகளை நடவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி ஆணையர் பொன்மணி தெரிவித்தார் .

நிகழ்ச்சியில் நகரப் பொறியாளர் அண்ணாதுரை, உதவி ஆணையர் சுரேஷ்குமார், ரா.அன்புச்செழியன், காவேரி மருத்துவமனை நிர்வாக இயக்குநர் மு.ராமச்சந்திர பாபு, முன்னாள் உதவி ஆணையர் வைத்தியநாதன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டுவைத்தனர்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top