Times of Puducherry

போக்குவரத்துத் துறை தன்னார்வத் தொண்டு நிறுவனமான ALERT அமைப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்ததம்

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
13 Oct 2026 • 10:57 PM
transport-department-signed-with-ALERT

சாலைப் பாதுகாப்பு மற்றும் அவசரகால நடவடிக்கைகளை மேம்படுத்த ALERT அமைப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

புதுச்சேரி அரசு, போக்குவரத்துத் துறை, தன்னார்வத் தொண்டு நிறுவனமான ALERT (Amenity Lifeline Emergency Response Team) அமைப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் போக்குவரத்துத்துறைச் செயலர் ராஜீவா சுக்லா, ALERT அமைப்பின் தலைவர் ஆர். மன்னாதன் கையெழுத்திட்டனர். அறிவுசார் கூட்டாளராக, லாரி ஓட்டுநர்கள், PRTC பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர்களுக்காக ALERT அமைப்பு சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தும்.

ஓட்டுநர் உரிமம் பெறுதல், வாகனப் பதிவுச் சான்றிதழ் (RC) புதுப்பித்தல் மற்றும் தகுதிச் சான்றிதழ் பெறுதல் போன்ற பணிகளுக்காகப்
போக்குவரத்துத் துறைக்கு வரும் பொதுமக்களுக்கும் இந்நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

மேலும், மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்காக விபத்துத் தடுப்பு மற்றும் அவசரநிலைத் தயார்நிலை நிகழ்ச்சிகளை நடத்துவதுடன்,
விபத்துகளைத் தடுப்பதில் சமூகப் பங்கேற்பையும் ஊக்குவிக்கும். விபத்து நிகழ்ந்த பின்னர் உயிரைக் காப்பதில் மிகவும் முக்கியமான “பொன்னான நேரத்தில்” (Golden Hour) வழங்கப்பட வேண்டிய முதலுதவி மற்றும் அவசரகால நடவடிக்கைகள் குறித்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் பள்ளிப் பேருந்துப்பணியாளர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்கும் இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் வழிவகை செய்கிறது.

விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நல் உள்ளம் கொண்டவர்களுக்கான (Good Samaritans) சட்டப் பாதுகாப்புகள் மற்றும் வெகுமதித்திட்டங்கள் குறித்தும் ALERT விழிப்புணர்வு ஏற்படுத்தும்.

மேலும், சாலைப் பாதுகாப்பு வார நிகழ்ச்சிகள், சாலை விழிப்புணர்வுப் பேரணிகள் மற்றும் கண்காட்சிகளில் போக்குவரத்துத் துறையுடன் இணைந்து செயல்படுவதுடன், செயல்படுவதுடன், சம்பந்தப்பட்ட துறைகளின் அலுவலர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளையும் நடத்தும்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top