Times of Puducherry

திருப்பூர் குமரன் மாணவர் சேவை மையம் : வெங்கடரமணி திறந்து வைத்தார்

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
18 Oct 2026 • 1:59 PM
tiruppur-kumaran-named-for-students-help-desk-by-sr.adv.venkataraman

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் புதிதாகக் கட்டப்பட்ட மாணவர் சேவை மையத்தை இந்தியாவின் தலைமை வழக்கறிஞர் ஆர். வெங்கடரமணி திறந்து வைத்தார். “திருப்பூர் குமரன் மாணவர் சேவை மையம் (TKSSC)” எனப் பெயரிடப்பட்டது. புதுவைப் பல்கலைக்கழகத்தில் புதிதாகக் கட்டப்பட்ட மாணவர் சேவை மையத்தை, இந்தியாவின் தலைமை வழக்கறிஞர் ஆர். வெங்கடரமணி திறந்து வைத்தார்.

மையத்திற்கு சுதந்திரப் போராட்ட வீரரும் இளைஞர் முன்னோடியுமான திருப்பூர் குமரனைக் கௌரவிக்கும் வகையில், “திருப்பூர் குமரன் மாணவர் சேவை மையம்” (Tiruppur Kumaran Student Service Centre – TKSSC) என்று அதிகாரப்பூர்வமாகப் பெயரிடப்பட்டது.

ஐதராபாத்து நல்சார் சட்டப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் ஸ்ரீகிருஷ்ண தேவ ராவ், புதுவைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் பி. பிரகாஷ் பாபு, பேராசிரியர் தரணிக்கரசு, மாணவர் நலத் துறை முதல்வர் பேராசிரியர் ஒய். வெங்கட ராவ், மாணவர் நலத் துறை இணை முதல்வர்கள் டாக்டர் ரஜனீஷ் அனுபம் டாக்டர் ரேது தியாகி ஆகியோர் முன்னிலையில் திறப்பு விழா நடைபெற்றது.

முதல்வர்கள், துறைத் தலைவர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள் மற்றும் பொறியியல் பிரிவு பணியாளர்கள் கலந்து கொண்டனர். புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்திற்கு எதிரே அமைந்துள்ள திருப்பூர் குமரன் மாணவர் சேவை மையம், மாணவர்களுக்குத் தேவையான அனைத்து அத்தியாவசியச் சேவைகளையும் ஒரே இடத்தில் வழங்குவதன் மூலம் வளாக வாழ்க்கையை மேம்படுத்தும் நோக்கத்துடன் நிறுவப்பட்டுள்ளது. மாணவர்களுக்கான கல்வி, நிர்வாக, தனிநபர் மற்றும் நலன் சார்ந்த சேவைகளை ஒரே கூரையின் கீழ் வழங்கும் ஒருங்கிணைந்த நிறுவன வசதியாக இம்மையம் செயல்படும்.

மாணவர்களின் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, தலைமை விடுதி அதிகாரி அலுவலகம், வேலைவாய்ப்புப் பிரிவு, மாணவர் நலத்துறை முதல்வர் அலுவலகம், ஒழுங்கு மேலாண்மைக் குழு மாணவர் ஆதரவுப் பிரிவுகள் உள்ளிட்ட மாணவர் சேவை அலுவலகங்கள் TKSSC-இல் இயங்குகின்றன.

மாணவர் தொடர்பான அனைத்துச் சேவைகளையும் ஒரே இடத்தில் கொண்டுவரும் இந்தத் திட்டம், அனைத்து மாணவர்களின் நலன் மற்றும் வசதியைக் கருத்தில் கொண்டு, சுமார் 500 பேர் அமரக்கூடிய திறன் கொண்ட மேடையுடன் கூடிய அரை மூடிய அரங்கம் (Amphitheatre) அமைக்கப்பட்டுள்ளது. இது மாணவர் கூட்டங்கள், கலந்துரையாடல்கள் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளுக்கான இடமாகச் செயல்படும். அரங்கத்தைச் சுற்றி இரண்டு உணவு விற்பனை நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், கூட்டங்கள் மற்றும் கல்விசார் விவாதங்களை நடத்துவதற்காக ஒரு சிறு வட்ட மேசை கருத்தரங்கு அரங்கமும் இம்மையத்தில் உள்ளது.
திருப்பூர் குமரன் மாணவர் சேவை மையம் நிறுவப்பட்டது.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top