Times of Puducherry

திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் நவராத்திரி உற்சவம் தொடங்கியது

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
12 Oct 2026 • 11:20 AM
thiruveeratneswarar-temple-navrathri-comences-cud

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகில் உள்ள திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவில் மிகவும் பழமையான மற்றும் பிரசித்தி பெற்ற சிவத்தலமாகும். இது அட்ட வீரட்டான தலங்களில் ஒன்றாகும்.

இக்கோவிலில் நவராத்திரி உற்சவம் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதத்தில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதேபோல இந்த ஆண்டு நவராத்திரி உற்சவம் தொடங்கியது. இதையொட்டி அம்பாள் பெரியநாயகி கொலு மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு கொலு பொம்மைகள் வைக்கப்பட்டு அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, விசேஷ பூஜை ஆகியவை நடந்தது. தொடர்ந்து வண்ண வண்ண வாசனை மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை நடந்தது.

இதில் உற்சவதாரர் மருந்து வணிகர்கள் சங்க தலைவர் மீனாட்சி மெடிக்கல் சந்திரகுப்தா உள்ளிட்ட ஏராளமானோர் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நவராத்திரி ஒன்பது நாட்களும் அம்பாள் பெரியநாயகிக்கு தினசரி சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் மற்றும் தீபாராதனைகள் நடைபெற உள்ளது.

9 வது நாளான விஜயதசமி அன்று அம்பு உற்சவம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கோவில் திருப்பணி வேலை நடைபெறுவதால்அம்பு உற்சவம் நடைபெறாது என கோவில் நிர்வாகத்தினர் அதை தெரிவித்துள்ளனர்.

திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் நவராத்திரி உற்சவத்தையொட்டி கொலு மண்டபத்தில் அம்பாள் பெரியநாயகிக்கு சிறப்பு மலர் அலங்காரத்தில் மகா தீபாராதனை நடந்தது.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top