Times of Puducherry

சுருக்கம் போயே போச்சு! 40 வயதிலும் 20 வயது இளமையைத் தரும் 'சங்குப் பூ' ரகசியம்

எழுதியவர்: செய்தி ஆசிரியர்
1 நிமிட வாசிப்பு
4 Oct 2026 • 3:40 PM
the butterfly pea secret that can make you look 20 even at 40

சிவபெருமானுக்கும் விஷ்ணு பகவானுக்கும் உகந்த, வழிபாட்டுக்குரிய நீல நிறச் ‘சங்குப் பூ’ (Butterfly Pea Flower / Clitoria ternatea) ஆன்மீகத்திற்கு மட்டுமல்லாமல், சரும ஆரோக்கியத்திற்கும் ஒரு தெய்வீக மருந்தாகப் பயன்படுகிறது. பண்டைய ஆயுர்வேத அழகு பராமரிப்பில் ‘சங்குப் பூ’ சருமத்தை என்றும் இளமையாக வைத்திருக்கும் ஒரு சிறந்த மூலிகையாகக் கருதப்பட்டதாகப் புகழ்பெற்ற ஆயுர்வேத மருத்துவர்கள் கூறுகின்றனர்.

சந்தையில் ஆயிரக்கணக்கில் விற்கப்படும் ரசாயன சீரம்களுக்குப் பதிலாக, வீட்டில் இருக்கும் சங்குப் பூவைக் கொண்டு தயாரிக்கப்படும் இயற்கை ஃபேஸ் பேக்குகள் மற்றும் சீரம்கள் மூலம் சருமத்தை எவ்வாறு பொலிவாக்குவது என்பது குறித்த விரிவான தொகுப்பு இதோ!

சுருக்கங்களை நீக்கி இளமையைத் தக்கவைக்கும்

வயதாகும்போது சருமம் தளர்ந்து சுருக்கங்கள் ஏற்படுவது இயல்பு. சங்குப் பூவில் ‘புரோ ஆந்தோசயனிடின்’ (Proanthocyanidin) என்னும் சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட் அதிக அளவில் உள்ளது. இது சருமத்தின் அடிப்படை அமைப்பான கொலாஜன் மற்றும் எலாஸ்டின் உற்பத்தியை இயற்கை முறையில் அதிகரிக்கிறது. இதன் சாற்றை முகத்தில் தொடர்ந்து பயன்படுத்தி வர, மெல்லிய கோடுகள் மற்றும் சுருக்கங்கள் மறைந்து முகம் என்றும் இளமையாகக் காட்சியளிக்கும்.

ஃப்ரீ ரேடிக்கல் பாதிப்புகளிலிருந்து பாதுகாப்பு

இதில் நிறைந்துள்ள ஆந்தோசயனின்கள், பாலிஃபீனால்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் சருமத்திற்குப் பாதுகாப்பு வளையமாகச் செயல்படுகின்றன. சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் சூரிய ஒளியால் உண்டாகும் ஃப்ரீ ரேடிக்கல் (Free radicals) பாதிப்புகளைத் தடுத்து, செல்களைப் புதுப்பிக்கின்றன.

உடனடி குளிர்ச்சியும் வெயில் நிவாரணமும்

சூரியனின் கதிர்வீச்சு மற்றும் வெப்பத்தால் சருமத்தில் சிவத்தல், ஒவ்வாமை, அரிப்பு அல்லது எரிச்சல் ஏற்படும் போது, சங்குப் பூவின் குளிர்விக்கும் பண்புகள் உடனடியாக நிவாரணம் அளிக்கின்றன. இது வெயிலால் காய்ந்த சருமத்தைச் சீரமைத்துப் புத்துணர்ச்சி அளிக்கிறது.

முகப்பரு மற்றும் கரும்புள்ளிகளுக்குச் செக்

சங்குப் பூ சாற்றில் உள்ள இயற்கை கிருமி நாசினி பண்புகள் முகப்பருவை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழிக்கின்றன. சருமத் துளைகளில் தங்கியுள்ள அழுக்குகள் மற்றும் நச்சுக்களை வெளியேற்றி, முகப்பருவால் ஏற்படும் கரும்புள்ளிகள் மற்றும் நிறமாற்றத்தைப் படிப்படியாகக் குறைக்கிறது.

சரும நீரேற்றம்

வறண்ட சருமம் உள்ளவர்களுக்குச் சங்குப் பூ சாறு சிறந்த ஈரப்பத மூட்டியாகச் செயல்படுகிறது. சருமத்தின் ஆழமான அடுக்குகளுக்குச் சென்று ஈரப்பதத்தைத் தந்து, முகத்தை எப்போதும் மிருதுவாக வைத்திருக்கிறது.

வீட்டிலேயே தயாரிக்கும் ‘சங்குப் பூ’ ஃபேஸ் பேக்

தேவையான பொருட்கள்

புதிய அல்லது உலர்ந்த சங்குப் பூக்கள்: 6 முதல் 8

கடலை மாவு (அல்லது) அரிசி மாவு: 1 மேசைக்கரண்டி

சுத்தமான தேன்: 1 தேக்கரண்டி

காய்ச்சாத பசும்பால்: சிறிதளவு

தயாரிக்கும் முறை

சங்குப் பூவின் பச்சை நிற இதழ் காம்புகளை நீக்கிவிட்டு, பூக்களை மட்டும் சிறிதளவு காய்ச்சாத பாலுடன் சேர்த்து மிக்சியில் மென்மையான விழுதாக அரைத்துக் கொள்ளவும். இந்த அடர் நீல நிற விழுதுடன் கடலை மாவு அல்லது அரிசி மாவு மற்றும் தேன் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

முகத்தைச் சுத்தமாகக் கழுவிய பின், இந்த பேக்கை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் சமமாகப் பூசவும். 15 முதல் 20 நிமிடங்கள் உலர விட்டு, பின்னர் குளிர்ந்த நீரால் மெதுவாக மசாஜ் செய்து கழுவவும். வாரத்திற்கு இரண்டு முறை இதைச் செய்து வந்தால், முகம் உடனடி பொலிவுடன் ஜொலிக்கும்.

இயற்கை ஈரப்பதமூட்டும் சங்குப் பூ சீரம்

தேவையான பொருட்கள்

தண்ணீர்: 1 கப்

சங்குப் பூக்கள்: 5

கற்றாழை ஜெல் (Aloe Vera Gel): 2 தேக்கரண்டி

வைட்டமின் E கேப்ஸ்யூல் (Vitamin E Capsule): 1

தயாரிக்கும் முறை

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, சங்குப் பூக்களைப் போட்டு குறைந்த தீயில் கொதிக்க வைக்கவும். தண்ணீர் அடர் நீல நிறமாக மாறி, கொதித்து பாதியாக வற்றும் வரை (சுமார் 5 நிமிடங்கள்) காய்ச்சவும். இந்த நீல நிற நீர் குளிர்ந்ததும், அதனுடன் 2 தேக்கரண்டி கற்றாழை கூழ் மற்றும் ஒரு வைட்டமின் E கேப்சூலைச் சேர்த்து நன்றாகக் கலக்கினால் ஜெல் போன்ற சீரம் கிடைக்கும்.

இதை ஒரு சொட்டு மருந்து பாட்டிலில் (Dropper bottle) சேமித்து குளிர்சாதனப் பெட்டியில் (Fridge) வைத்தால் 10 நாட்கள் வரை கெடாமல் இருக்கும். தினமும் இரவு தூங்குவதற்கு முன், 3-4 சொட்டுகள் எடுத்து முகத்தில் தடவி மெதுவாக மசாஜ் செய்து வரலாம்.

முக்கிய முன்னெச்சரிக்கைகள்

பேட்ச் டெஸ்ட் (Patch Test): சங்குப் பூ ஃபேஸ் பேக் அல்லது சீரத்தை முதல்முறையாகப் பயன்படுத்துபவர்கள், கையின் உட்பகுதியில் சிறிதளவு தடவிப் பார்த்து ஒவ்வாமை (Allergy) எதுவும் இல்லை என்பதை உறுதி செய்துகொள்வது நல்லது. புதிய சங்குப் பூக்கள் கிடைக்காதவர்கள், நாட்டு மருந்துக் கடைகளிலோ அல்லது இணையத்திலோ கிடைக்கும் தரமான ‘உலர்ந்த சங்குப் பூக்களை’ (Dried Butterfly Pea Flowers) பயன்படுத்தலாம்.

ரசாயனம் நிறைந்த விலையுயர்ந்த அழகுசாதனப் பொருட்கள் தற்காலிகப் பொலிவைத் தந்தாலும், நீண்ட காலத்தில் பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம். எனவே, பூஜைக்குப் பயன்படும் இந்த நீல மலர்களைக் கொண்டு வீட்டிலேயே எளிய முறையில் பராமரிப்பு செய்து இயற்கையான பளபளப்பைப் பெறுங்கள்!

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top