Times of Puducherry

மாநில அளவிலான 28வது மாநில அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டி

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
4 Oct 2026 • 4:23 PM
roller-skating-prize-distribution

புதுச்சேரியில் மாநில அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார் பதக்கங்கள் வழங்கி பாராட்டினார்.

புதுச்சேரி ரோலர் கேட்டரிங் சங்கம் சார்பில் புதுச்சேரி மாநில அளவிலான 28வது மாநில அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டி லாஸ்பேட்டை அரசு ஸ்கேட்டிங் மைதானத்தில் கடந்த 2ஆம் தேதி துவங்கியது. இந்த போட்டியை விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜசேகரன் தொடங்கி வைத்து வாழ்த்தினார். இப்போட்டியில் புதுச்சேரி பிராந்தியமான காரைக்கால், மாகே, ஏனாம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 5 முதல் 24 வயது வரை உள்ள 400கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.

மாநில அளவிலான 28வது மாநில அளவிலான ரோலர் ஸ்கேட்டிங் போட்டி

போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசளிப்பு விழா ரோலர் ஸ்கேட்டிங் மைதானத்தில் நடைபெற்றது. சங்கத்தின் நிறுவனர் திருவேங்கடம், தலைவர் பழனி தலைமையில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக வில்லியனூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார் கலந்துகொண்டு போட்டியில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பதக்கங்கள் அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

மேலும் இந்த விழாவில் சீனியர் துணைத் தலைவர் தனஞ்ஜெயன், பொருளாளர் செந்தில், துணை தலைவர் மைக்கேல், சங்கத்தின் நிர்வாகிகள், பயிற்சியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top