Times of Puducherry

த.வெ.க கூட்டணியில் பா.ம.க இணைய உள்ளதா என்பது குறித்து த.வெ.க தலைமை தான் பதில் அளிக்க வேண்டும் - தமீமுன் அன்சாரி

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
2 Oct 2026 • 3:34 PM
thamium ansari-pressmeet

மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான தமீமுன் அன்சாரி திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது;

கட்சியின் வளர்ச்சிக்காக இன்றிலிருந்து அடுத்த மூன்று மாதங்கள் நிதி திரட்ட உள்ளோம் ஏழைகள் மற்றும் தொழிலாளர்களை தவிர பெரிய வணிகர்கள் வசதி படைத்தவர்களிடம் நிதி பெற உள்ளோம். த.வெ.க அரசு மாற்றம் தருவதாக அமைந்தது. ஆனால், மக்களுக்கு ஏமாற்றமே கிடைத்துள்ளது. வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் சூழல் இருந்தது. தற்போது எம்எல்ஏக்களுக்கு பணம் கொடுத்து அவர்களை விலைக்கு வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் பள்ளிக்கூடம் செல்லக்கூடிய மாணவி கூட்டு பலாகாரம் செய்யும் அளவு நிலை தமிழகத்தில் உள்ளது. கடந்த ஆட்சியில் குற்றங்கள் இருந்தது நாங்கள் ஆட்சி அமைத்தால் 100 நாட்களில் எந்த குற்றமும் தமிழ்நாட்டில் இருக்காது என்றார்கள். ஆனால், கடந்த கால ஆட்சிகளை விட அதிக அளவு குற்றங்கள் நடந்து வருகிறது. சட்டம் ஒழுங்கு குறித்து கேள்வி கேட்டால் அதற்கு முதலமைச்சர் உரிய பதில் அளிக்கவில்லை. மாறாக திமுக மீது மட்டுமே குற்றம் சாட்டி திசைத்திருப்பும் வேலையை தான் த.வெ.கவினர் செய்து வருகிறார்கள் இது ஆரோக்கியமானது அல்ல. எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்டால் அதற்கு திசை திருப்பாமல் பதில் அளிக்க வேண்டும்.

கம்யூனிஸ்ட் கட்சியினர் தேவையில்லாமல் பழி போட மாட்டார்கள். அவர்களே த.வெ.கவினர் இடைதேர்தலுக்கு வாக்குக்கு பணம் தருகிறார்கள் என கூறுகிறார்கள் என்றால் அதிர்ச்சியாக உள்ளது. இதற்கு மாற்ற அரசியல் என்று கூறும் முதலமைச்சரும் அமைச்சர்
ஆதவ் அர்ஜுனாவும் தான் விளக்கம் அளிக்க வேண்டும். பாமக த.வெ.க கூட்டணியில் இணைய உள்ளதாக செய்திகள் வருகிறது. பாமக இருக்கும் கூட்டணியில் நாங்கள் இருக்க மாட்டோம் என வி.சி.க தொடர்ச்சியாக கூறி வருகிறார்கள். இந்த நிலையில் இந்த விவகாரத்திற்கு அவர்கள் கூட்டணியின் தலைமையான த.வெ.க தான் பதில் அளிக்க வேண்டும்.

இடைத்தேர்தலில் திமுகவிற்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. திமுகவின் திட்டங்களை பெயர் மாற்றி செயல்படுத்துவதாக பொதுமக்கள் பரவலாக பேசி வருகின்றனர். குதிரை பேரம் மூலம் எம்எல்ஏ பதவி ராஜினாமா செய்ததை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
திமுக – அதிமுக கூட்டணி அமைத்தார்கள் என அதிமுக அல்லது திமுகவின் தலைவர்கள் கூறியிருக்க வேண்டும். இரண்டு கட்சிகளில் தலைவர்கள் கூறி இருக்க வேண்டும், ஆனால், அப்படி யாரும் கூறவில்லை. சிலர் வேண்டுமென்றே வீண் பழிகளை சுமத்துகிறார்கள் அது ஆரோக்கியமானது அல்ல.

14 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ள ஆயுள் சிறை தண்டனை கைதிகளை சாதி மதம் இன்றி விடுதலை செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளோம். ஆயுள் தண்டனை சிறைவாசிகள் விடுதலைக்கு தலைமை தேர்தல் ஆணையர் தடையாக இருப்பதாக த.வெ.க கூட்டணி கட்சியினர் தெரிவிக்கிறார்கள். அப்படி அது உண்மையாக இருந்தால் தலைமை செயலாளர் மீது முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தலைமை தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்ய வேண்டும். மேகதாது விவகாரத்தில் தமிழக அரசு சமரசம் செய்யக்கூடாது.
கர்நாடக அணை திறக்கும் மற்றும் மூடும் அதிகாரம் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு வழங்கப்பட வேண்டும் வெறும் உத்தரவு இடம் அதிகாரம் மட்டும் அவர்களுக்கு இருக்கக் கூடாது எனத்தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து கட்சி வளர்ச்சி நிதியாக நன்கொடை அளிக்கும் நிகழ்வு நடைபெற்றது, கட்சியின் தலைவர் அன்சாரி நன்கொடை அளித்து அதை தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து ஒருங்கிணைந்த செயல்திட்ட குழு கூட்டம் நடைபெற்றது.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top