Times of Puducherry
பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் அரசியல் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் மக்கள் செல்வாக்கை பார்த்து ராகுல் காந்தி போன்ற ஒரு சில அரசியல்வாதிகள் எஸ் ஐ ஆர் குறித்து அவதூறு பரப்பி பொய்யான வாதத்தை முன்வைத்து தேர்தல் ஆணையத்தையும் குறை கூறி அர்ப்ப அரசியல் செய்கின்றனர் விழுப்புரத்தில் பிஜேபி மாநிலச் செயலாளர் அஸ்வத்தாமன் செய்தியாளரிடம் தெரிவித்தார்.
சுப்ரீம் கோர்ட் தெளிவாகச் சொல்லி உள்ளது அதை மேற்கோள் காட்டி இரண்டு வாக்குரிமை உள்ள வாக்காளர் உரிமை மட்டுமே தமிழ்நாட்டில் நீக்கப்பட்டுள்ளது ஒரு வாக்காளரை கூட தமிழ்நாட்டில் நீக்கப்படவில்லை இதையெல்லாம் தெரியாமல் அரசியல் செய்கின்றனர். பாரத பிரதமரை குறித்து எது கூறினாலும் உலகம் முழுவதும் உற்றுநோக்கப்படுகின்றன இவற்றையெல்லாம் பொறுத்துக் கொள்ள முடியாமல் அரசியல் அடிப்படை அறிவு இல்லாமல் அரசியல் செய்கின்றனர்.
தமிழக வெற்றி கழக ஆட்சியில் அனைத்து பேருந்துகளிலும் கலர் மாற்றி வெற்றி என்ற பெயரை வைக்கின்றனர் முதலமைச்சர் அரசு பணத்தில் செய்யும் செலவை இப்படி வீணடிக்கலாமா அவரது சொந்த பணத்தில் இவற்றை செய்கிறாரா? கடந்த திமுக ஆட்சியில் விடியல் பயணம் என்று வைத்ததை மாற்றித்தான் தற்போது அவர் வெற்றிப் பயணம் என்று வைக்கின்றார் இது பயனற்ற செயல். தமிழக முழுவதும் காவல் நிலையம் மரணங்கள் சமூக விரோத குற்றங்கள் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன காவல்துறையும் முதல்வர் மீதும் மக்கள் நம்பிக்கை, பயம் இல்லை என்பது தான் தற்போது தமிழ்நாட்டின் நிலைமை என கூறினார்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.