Times of Puducherry
திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் வாங்கிய திமுக நபர் கைது செய்யப்பட்ட நிலையில் அந்த நிலத்தை விற்ற நபர் கைது செய்வது எப்போது என்கிற கேள்விக்கு விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என சமய அறநிலையத்துறை அமைச்சரும் ஸ்ரீரங்கம் தொகுதி எம்எல்ஏவுமான அமைச்சர் ரமேஷ் பதில் அளித்தார்.
திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் எதிரே உள்ள காதிகிராப்ட் விற்பனையகத்தில் தீபாவளி விற்பனையை அமைச்சர் ரமேஷ் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் தெரிவித்ததாவது:
கடந்த ஆட்சியில் கோவில் நிலங்களில் பல்வேறு முறை கேடுகள் நடந்துள்ளதாக பொதுமக்களை புகார்கள் அளித்துள்ளனர். அதனடிப்படையில் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சொந்தமான 50 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் குறித்து ஸ்ரீரங்கம் பகுதி மக்கள் அனைவரும் புகார் அளித்தனர் அந்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்ததில் அதில் முகாந்திரம் இருப்பது தெரிய வந்தது. அதன்படி ஸ்ரீரங்கம் திமுக பகுதி செயலாளர் ராம்குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் முன் ஜாமின் கேட்டு நீதிமன்றம் சென்றார். ஆனால், அந்த முன் ஜாமின் மனு தள்ளுபடி செய்ததை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விசாரணை நேர்மையாக நடைபெறும் இதற்குப் பின் யார் இருந்தாலும் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.
திமுக ஆட்சியில் திமுகவினர் பல கோவில் நிலங்களை அபகரித்துள்ளது தெரியவந்துள்ளது. கோவில் நிலத்தை வாங்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார், விற்ற நபர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்கிற கேள்விக்கு, விசாரணை நடத்தப்பட்டு புதுச்சேரியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற நீதிபதி மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பதிலளித்தார். காவல்துறையினர் இந்த வழக்கில் மிக சரியான பாதையில் சென்று கொண்டுள்ளார்கள். வழக்கில் கைது என்றதும் நெஞ்சுவலி என திமுக பிரமுகர் நாடகமாடினார். மருத்துவ சோதனையில் அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர். நிச்சயமாக யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் கைது செய்யப்படுவார்கள்.
த.வெ.க அரசுதான் கூட்டணி கட்சிகளை ஒன்றிணைத்து ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு வழங்கி உள்ளது. இந்த நேரத்தில் முதலமைச்சர் கூட்டணி கட்சித் தலைவர்களோடு சேர்ந்து பிரச்சாரம் செய்யவில்லை என தேவையில்லாமல் விமர்சனம் செய்கிறார்கள், கூட்டணி கட்சிகளை நாங்கள் அரவணைத்து செல்கிறோம். தாராபுரம் வேட்பாளர் மீது திமுக, அதிமுகவினர் பொய்யான விமர்சனங்களை வைக்கிறார்கள். அவர் மீது தனிப்பட்ட விமர்சனங்களை வைக்கிறார்கள். அதனால் தான் அவர் பிரச்சாரத்தின்போது அழுதார். அதிமுகவை நாங்கள் தன்னுடைய படுத்தவில்லை அதிமுக ஏற்கனவே நீர்த்து போய் தான் உள்ளது. முன்னாள் கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் மு க ஸ்டாலின் தன்னுடைய மகனுக்கு கடமை கண்ணியம் கட்டுப்பாடு குறித்து கற்றுத் தரவில்லை, அதனால் தான் அவர் ஆபாசமாகவும், அவதூறாகவும் பேசி வருகிறார்.தொடர்ந்து அவர் இப்படி பேசிக் கொண்டு வந்தால் கொளத்தூரில் இந்த தேர்தலில் என்ன நடந்ததோ அடுத்த தேர்தலில் உதயநிதி நிற்கும் பகுதியில் நடக்கும்.
234 தொகுதிகளிலும் நாங்கள் வாக்குக்கு பணம் கொடுக்காமல் வெற்றி பெற்றோம். இந்த சூழலில் இடைத்தேர்தலில் நாங்கள் பணம் தருகிறோம் என உங்களால் எப்படி கேட்க முடிகிறது, பணம் கொடுத்து வெற்றி பெற வேண்டும் என்கிற அவசியம் எங்களுக்கு இல்லை என தெரிவித்தார். முன்னதாக, சார் பதிவாளர் வனிதாவையும் கைது செய்ய தனிப்படை போலீஸார் திட்டமிட்டுள்ளனர். அவர் தற்போது காஞ்சிபுரம் மாவட்டத்தில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.