Times of Puducherry

'தூய்மையே சேவை' திட்டத்தினை ஆளுநர் தொடங்கி வைத்தார்

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
2 Oct 2026 • 2:29 PM
swachhata hi seva-governor-participation

தூய்மை பாரதம் திட்டத்தின், ‘தூய்மையே சேவை’ இயக்கத்தின்கீழ் கல்லூரி மாணவர்கள், தன்னார்வலர்கள் அதிகாரிகள் கலந்து கொண்ட பாண்டி மெரினா கடற்கரை தூய்மை பணி நடைபெற்றது. இதில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கே. கைலாஷ்நாதன் சிறப்பு விருந்தினராகக் பங்கேற்று தூய்மைப்பணியைத் தொடங்கி வைத்தார். சட்டப்பேரவை தற்காலிகத் தலைவர் ஆ. அன்பழகன், உள்ளாட்சித் துறை செயலர் விக்ராந்த் ராஜா, இயக்குநர் ஆதர்ஷ் மற்றும் அதிகாரிகள் தூய்மைப் பணியில் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில், துணைநிலை ஆளுநர் கே.கைலாஷ்நாதன் முன்மொழிய தூய்மையே சேவை உறுதி மொழியை அனைவரும் எடுத்துக் கொண்டனர். மேலும், தூய்மைப் பணியைத் தொடங்கி வைத்த துணைநிலை ஆளுநர் கே. கைலாஷ்நாதன் அப்பகுதியில் விளக்குக் கம்பங்களைப் பார்வையிட்டார். இதே போன்று புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மைப் பணி நடைபெற்றது. இதில் அங்கு பணியாற்றும் அதிகாரிகள், ஊழியர்கள் ஈடுபட்டனர்.

புதுச்சேரி ரயில் நிலையத்தில் ஜிப்மர் சார்பில் தூய்மைப் பணி நடைபெற்றது. இதை புதுச்சேரி சட்டப்பேரவை தற்காலிகத் தலைவர் ஆ.அன்பழகன் தொடங்கி வைத்தார். ஜிப்மர் ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் பிற பங்கேற்பாளர்கள் உள்ளிட்ட சுமார் 150 தன்னார்வலர்கள் இப்பணியில் பங்கேற்றனர்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top