Times of Puducherry
காந்தி கனவு கண்ட அந்த “தூய்மையான இந்தியாவை“ உருவாக்குவதுதான் அவருக்கு நாம் செலுத்தும் உண்மையான மரியாதை. தூய்மையே சேவை , விழிப்புணர்வு இயக்க நிகழ்ச்சியில் துணைநிலை ஆளுநர் . கைலாஷ்நாதன் பேசியதாவது:
குஜராத்தில், சபர்மதி ஆசிரமத்தில் நான் பணியாற்றினேன். அப்போது, காந்தியடிகளின் வாழ்க்கை முறையை, அவருடைய தூய்மை சிந்தனையை பற்றி அதிகம் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. காந்தி தானே துடப்பம் எடுத்து குப்பைகளை அகற்றி இருக்கிறார். துடப்பம்- வாளி எடுத்து தானே கழிவறையை சுத்தம் செய்து இருக்கிறார். அவரைப் பொறுத்தவரை தூய்மை என்பது தூய்மை பணியாளரின் வேலை மட்டுமல்ல. அது ஒவ்வொருவரின் சமூகப் பொறுப்பு. “இந்தியாவுக்கு சுதந்திரம் எவ்வளவு முக்கியமோ, அதே அளவு தூய்மையும் முக்கியம்” என்று நினைத்தார். தூய்மைதான், இந்தியாவின் உண்மையான வளர்ச்சிக்கு அடிப்படை – தூய்மையே சேவை என்று உணர்த்தினார்.
அவருடைய அந்த மகத்தான சிந்தனையை மக்கள் இயக்கமாக மாற்றும் நோக்கத்தில், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, 2014-இல் காந்தியடிகளின் பிறந்த நாளான அக்டோபர் 2-இல், இயக்கத்தைத் தொடங்கி வைத்தார். 10 ஆண்டுகளில், மிகப்பெரிய மக்கள் இயக்கமாக அது வளர்ந்து இருக்கிறது. தொடக்கத்தில், இந்த இயக்கத்தைப் பற்றி பலருக்கும் சந்தேகங்கள் இருந்தது. 120 கோடிக்கும் அதிகமான மக்கள் வாழும் பெரிய நாட்டை எப்படி தூய்மையாக மாற்ற முடியும்? வருடத்தில் ஒன்று-இரண்டு வாரங்கள் தூய்மைப் பணியில் ஈடுபட்டால் இந்தியா தூய்மையாகிவிடுமா? என்றும் கேட்டார்கள். ஆனால், இதில் நாம் புரிந்து கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான உண்மை இருக்கிறது. வெறும் குப்பைகளை அகற்றும் திட்டம் அல்ல. அது பழக்கத்தை மாற்றும் ஒரு சமுதாய இயக்கம். நம்மைச் சுற்றியுள்ள இடத்தை தூய்மையான வைத்துக் கொள்ள வேண்டும் என்ற சிந்தனையை, மனநிலையை மக்கள் மத்தியில் உருவாக்கும் இயக்கம். அதுதான் இந்த இயக்கத்தின் ஆழமான நோக்கம்.
அந்த மாற்றத்தை இன்று நாம் நாடு முழுவதும் பார்க்கிறோம். கிராமங்களில், நகரங்களில், , கோயில், நீர்நிலைகள்– எங்கு பார்த்தாலும் தூய்மை பற்றிய எண்ணம் வேரோடி இருக்கிறது. பொது இடங்களில் “குப்பை போடுவது தவறு” என்ற எண்ணம் மக்களின் மனதில் இயல்பாக உருவாகி இருக்கிறது. பிளாஸ்டிக் பயன்பாடு குறைந்து சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டு இருக்கிறது. இதுதான் இந்த இயக்கத்தின் மாபெரும் வெற்றி.
இந்த இயக்கம் பெண்களின் கண்ணியத்தை, சுயமரியாதையை காப்பாற்றுவதில் எப்படிப்பட்ட சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். இன்று, நடுத்தர வயதைக் கடந்தவர்களிடம் கேட்டால் தெரியும். சில வருடங்களுக்கு முன்னால், பல வீடுகளில் கழிவறைகள் இல்லை. பல கிராமங்களில் பாதுகாப்பான கழிப்பிட வசதி இல்லை. ஆண்கள், பெண்கள், குழந்தைகள், என பலரும் திறந்த வெளியைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் இருந்தது. இது வட இந்தியாவில் அதிகம்.அதனால் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள் பெண்கள். அதிலும் ஏழை-எளிய, நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெண்கள் இயற்கை உபாதைகளை கழிக்க இரவு நேரத்தில்தான் போக வேண்டி இருந்தது. இரவு வரை காத்திருக்க வேண்டும். இதனால் உடல் பாதிப்பும் மன அழுத்தமும் அவர்களுக்கு ஏற்பட்டது. இளம் பெண்கள், பள்ளி-கல்லூரி மாணவிகளின் நிலைமை இன்னும் வேதனையானது. மாதவிடாய் காலங்களில் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளானார்கள். பல பள்ளிகளில் பாதுகாப்பான கழிவறை இருக்காது. அதனால், பெண் குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதையே தவிர்த்தார்கள். படிப்படியாக படிப்பை பாதியிலேயே நிறுத்த வேண்டிய சூழ்நிலை இருந்தது. ஆனால் இயக்கம் இந்த நிலையை மாற்றி அமைத்தது. இன்று நாடு முழுவதும் சுமார் 12 கோடி வீடுகளில் கழிப்பறைகள் கட்டப்பட்டு இருக்கிறது. பள்ளிகளில், கிராமத்தில், நகரத்தில், பொது இடங்களில் கழிவறை வசதிகள் உருவாக்கப்பட்டு இருக்கிறது. ”திறந்தவெளி கழிப்பிடம்” இன்று பெருமளவு ஒழிக்கப்பட்டு இருக்கிறது. பெண்களும் குழந்தைகளும் பாதுகாப்பாக, சுயமரியாதையோடு வாழும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது. இதுதான் SWACHH BHARAT இயக்கத்தின் உண்மையான சமுதாயப் புரட்சி. இதற்காக பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு நாம் நன்றி சொல்லியாக வேண்டும்.
புதுச்சேரி மாநிலத்தில் இந்த தூய்மை இந்தியா இயக்கத்தை அரசு தீவிரமாக முன்னெடுத்ததால் இன்று புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் நகராட்சிகள், பத்து COMMUNE PANCHAYAT-கள் திறந்த வெளி கழிப்பில்லா பகுதியாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதிலும் புதுச்சேரி மற்றும் உழவர்கரை நகராட்சிகள் ODF++ தகுதியைப் பெற்றி இருக்கிறது. புதுச்சேரியில் மட்டுமல்ல, நாடு முழுவதும் இந்த தூய்மை இந்தியா இயக்கம் மாபெரும் வெற்றி பெற்று இருக்கிறது என்றால், அதற்கு தூய்மைப் பணியாளர்களின் பங்கு மிக முக்கியம். அவர்கள் இந்த இயக்கத்தின் தூதுவர்களாக செயல்பட்டார்கள். சகோதர-சகோதரிகளே ! நீங்கள் இல்லை என்றால், இந்த இயக்கம் இவ்வளவு பெரிய வெற்றி பெற்று இருக்காது. வெறும் கனவாக போயிருக்கும். நாம் தூங்கி எழுவதற்கு முன்பே அவர்கள் தூய்மைப் பணியைத் தொடங்கி விடுகிறார்கள். குப்பைகளை சேகரிக்கிறார்கள். சாலைகளை சுத்தம் செய்கிறார்கள். மழை, வெயில் என்று பார்க்காமல் அர்ப்பணிப்போடு வேலை செய்கிறார்கள். அவர்களுடைய கடமை உணர்வுக்கு நான் தலைவணங்கி, அவர்களை மனதார பாராட்டுகிறேன். புதுச்சேரி அரசு சார்பிலும், மக்கள் சார்பிலும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
தூய்மையான இந்தியாவை உருவாக்குவதில் இளைஞர்களின் பங்களிப்பை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். இளைஞர்களின் உற்சாகத்தை பலமுறை பல இடங்களில் பார்த்திருக்கிறேன். பாண்டி மெரினா கடற்கரையில் SWACHHATA HI SEVA” தூய்மை பணியை தொடங்கி வைத்தேன். அதில், பள்ளி-கல்லூரி மாணவர்கள் NSS, NCC VOLUNTEERS மிகவும் உற்சாகமாக தூய்மைப் பணியில் ஈடுபட்டதை பார்த்தேன். அவர்கள் ஈடுபாட்டோடு தூய்மை பணியை செய்தார்கள். இளைய தலைமுறையின் சமுதாய பொறுப்புணர்வுக்கு என்னுடைய மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.