Times of Puducherry
சுகாதாரத் துறையின் கீழ் செயல்படும் மாவட்ட நலவாழ்வுச் சங்கத்தில் செவிலியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 115 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 24.10.2026க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
ஒப்பந்த/ தற்காலிக செவிலியர் (Staff Nurse)
காலியிடங்களின் எண்ணிக்கை: 115
கல்வித் தகுதி: செவிலியர் பட்டய படிப்பு (GNM)/ செவிலியர் இளங்கலை பட்டப்படிப்பு (B.Sc (Nursing)) படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 50 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s39778d5d219c5080b9a6a17bef029331c/uploads/2026/10/17916250034535.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: நிர்வாகச் செயலாளர்/ மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட நலவாழ்வுச் சங்கம், செங்கல்பட்டு மாவட்டம் – 603001
விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.10.2026
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.