Times of Puducherry

SUCI கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் கருப்பு துணி கட்டி போராட்டம்

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
17 Oct 2026 • 11:41 PM
suci-protest-for-gynash-resign

SUCI கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் கருப்பு துணி கட்டி போராட்டம்!. SUCI கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வாக்குத்திருடன் ஞானேஷ்குமாரைக் கண்டித்தும், புது தில்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களை காவல்துறையைக் கொண்டு துன்புறுத்துவதை கண்டித்தும் SUCI கம்யூனிஸ்ட் கட்சியின் மடுகரை கிளை சார்பாக சுரேஷ் தலைமையில் மடுகரை மந்தை வெளியில் அமைதி போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கண்கள் வாயில் கருப்பு துணிக் கட்டி மத்திய அரசுக்கு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
போராட்டத்தில் ஆனந்தன் சாருமதி , பிரீத்தி, தமிழரசி, கமால், , குரோஷிக், திவ்யா, எபினேசர் சாமுவேல் மற்றும் காமராஜர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

SUCI கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் கருப்பு துணி கட்டி போராட்டம்
NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top