Times of Puducherry
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் நீக்குதலுக்குகான சிறப்பு முகாம் வருகின்ற 17 ஆம் தேதி நடக்கிறது என தலைமை தேர்தல் அதிகாரி ரவி பிரகாஷ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:
புதுச்சேரில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு இயக்கம் நடைபெற்று வருகிறது. புதுச்சேரில் வாக்காளர் பட்டியலுக்கான சிறப்பு தீவிரத் திருத்தப் பணிஅக்டோபர் 2025 முதல் 14 பிப்ரவரி 2026 வரை மேற்கொள்ளப்பட்டது. 14 பிப்ரவரி 2026 அன்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் வாக்காளர் பட்டியலில் 9,44,211 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
வரைவு வாக்காளர் பட்டியலுக்கு முந்தைய பட்டியலில் 10,21,578 வாக்காளர்கள் இருந்தனர். வரைவு வாக்காளர் பட்டியலில் 9,18,111வாக்காளர்கள் இடம்பெற்றிருந்தனர். கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகள் பெறப்பட்ட காலகட்டத்தில் 42,719 வாக்காளர்கள் புதிதாகச் சேர்க்கப்பட்டதுடன், தகுதியற்ற 16,619 பதிவுகள் நீக்கப்பட்டன. இதன் மூலம் வாக்காளர் பட்டியலில் நிகரமாக 26,100 வாக்காளர்கள் கூடுதலாகச் சேர்க்கப்பட்டனர்.
இத்திருத்தப் பணி புதுச்சேரி முழுவதும் உள்ள 1,099 வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ளப்பட்டது. இதில் சட்டப்பூர்வப் பணிகளை மேற்கொண்ட 17 வாக்காளர் பதிவு அதிகாரிகள் (EROS) மற்றும் 30 உதவி வாக்காளர் பதிவு அதிகாரிகள் (AEROs), 1,099 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLOS) மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் 3,065 வாக்குச்சாவடி நிலை முகவர்கள் (BLAs) ஆகியோர் பங்கேற்றனர்.
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, சிறப்பு தீவிரத் திருத்தம், 2026 (SIR-2026)-இன் போது வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட 1,03,467 வாக்காளர்களின் விவரங்களை மீண்டும் சரிபார்க்கும் சிறப்பு இயக்கம், புதுச்சேரியின் அனைத்துப் பிராந்தியங்களிலும் 6 அக்டோபர் 2026 முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அக்டோபர் 2026 நிலவரப்படி, 97,395 வாக்காளர்களின் விவரங்கள் (சுமார் 94%) மீண்டும் சரிபார்க்கப்பட்டுள்ளன; 6,072 வாக்காளர்களின்விவரங்களைச் சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. மீதமுள்ள சரிபார்ப்புப் பணிகள் 20 அக்டோபர் 2026-க்குள் நிறைவுசெய்யத்திட்டமிடப்பட்டுள்ளது. தகுதியுள்ள எந்தவொரு வாக்காளரும் வாக்காளர் பட்டியலில் விடுபடக் கூடாது என்பதை உறுதிசெய்யும் நோக்கில், அடுத்த சிறப்பு முகாம் 17.10.2026 (சனிக்கிழமை) அன்று அனைத்து வாக்கு அமைவிடங்களிலும் நடத்தப்படும்.
நீக்கப்பட்டதற்கான காரணம் சிறப்பு தீவிரத்திருத்தம், 2026 (SIR-2026)-இல் நீக்கப்பட்டோர் நிரந்தரமாக இடம்பெயந்தோர். இருப்பில்இல்லாதோர் சிறப்பு இயக்கத்தி கீழ் நிலவரப்படி மீண்டும் சரிபார்க்கப்பட்டு தகுதியற்றோராகக் கண்டறியப்பட்டோர் மீண்டும் சரிபார்க்கப்பட்ட 97,395 வாக்காளர்களில், நிரந்தரமாக இடம்பெயர்ந்தமை, இறப்பு, இருப்பிடத்தில் இல்லாமை, இரட்டைப் பதிவுகள், வெளிநாட்டுக் குடியுரிமை பெற்றமை மற்றும் இதர காரணங்களின் அடிப்படையில் 93,493 பேர் வாக்காளர் பட்டியலில் இடம்பெறத் தகுதியற்றவர்கள் எனக் கண்டறியப்பட்டுள்ளனர்.
மொத்தம் 3,902 வாக்காளர்கள் தங்களது உரிய முகவரிகளில் வசிப்பதும், வாக்காளர் பட்டியலில் இடம்பெறத் தகுதியுடையவர்கள் என்பதும் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவர்களில் 3,387 பேர் ஏற்கெனவே வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 515 வாக்காளர்களிடமிருந்து பெயர் சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் புதிய படிவம்-6 மூலம் பெறப்பட்டுள்ளன. வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் இடம்பெறாத தகுதியுள்ள நபர்கள், ஆண்டு முழுவதும் எந்த நேரத்திலும் பெயர் சேர்ப்பதற்கான படிவம்-6-ஐ இணையவழியாக (https://voters.eci.gov.in/) அல்லது சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் (BLO) சமர்ப்பிக்கலாம். BLO விவரங்களைhttps://ceopuducherry.py.gov.in/blo_details.php என்ற இணையதளத்தில் கண்டறியலாம்.
வாக்காளர் பட்டியல் தொடர்பான குறைகள் அல்லது படிவம்-6 சமர்ப்பிப்பதற்கான உதவி தேவைப்படுவோர் 1950 உதவி எண்ணைத்தொடர்புகொள்ளலாம் அல்லது அலுவலக நேரங்களில் சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அதிகாரியின் அலுவலகத்தை அணுகலாம்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான விண்ணப்பம். வாக்காளர் பட்டியலிலிருந்து பெயரை நீக்குவதற்கானவிண்ணப்பம்.வசிப்பிட மாற்றம், பதிவுகளில் திருத்தம், வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைக்கு (EPIC) மாற்று அட்டை பெறுதல் அல்லதுமாற்றுத்திறனாளி (PwD) எனக் குறியிடுதல் ஆகியவற்றுக்கான விண்ணப்பம். தகுதியுள்ள எந்தவொரு வாக்காளரும் வாக்காளர் பட்டியலில் விடுபடக் கூடாது என்பதை உறுதிசெய்வதில் புதுச்சேரி தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகம் தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறது. தகுதியுள்ள குடிமக்கள் இந்தச் சிறப்பு இயக்கத்தைப் பயன்படுத்தி, தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக்கொண்டு, ஜனநாயகச் செயல்பாட்டில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.