Times of Puducherry
புதுச்சேரி நிதித்துறை துணைச் செயலாளர் சிவக்குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், குரூப் சி மற்றும் குரூப் பி – யில் உள்ள அரசிதழ் பதிவு பெறாத ஊழியர்களுக்கு, 31.03.2026 அன்று பணியில் இருந்து, 2025-26-ம் ஆண்டில் குறைந்தது 6 மாதம் தொடர்ந்து பணி செய்தவர்களுக்கு, உற்பத்தி திறன் போனஸ் திட்டத்தில் வராதவர்களுக்கு மட்டும் இந்த போனஸ் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 30 நாள் போனஸ் ரூ.6,908 வழங்கப்படும் என்றும், தற்காலிக தொழிலாளர்களுக்கு 240 நாள் வேலை செய்தவர்களுக்கு ரூ.1,184 வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய துணை ராணுவ படை, ஆயுதப்படை ஊழியர்களுக்கும் இது பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
6 மாதத்திற்கும் குறைவாக பணி செய்தவர்களுக்கு, பணி செய்த மாதங்களுக்கு ஏற்ப விகிதாச்சார அடிப்படையில் போனஸ் வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. இந்த தொகை 2026-27-ம் நிதி ஆண்டின் பட்ஜெட்டில் இருந்து வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.