Times of Puducherry

சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு கடலூர் எஸ்பி பாராட்டு சான்றிதழ்

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
14 Oct 2026 • 9:27 PM
sp-commends-police-officers-for-their-excellent-service

நிபந்தனை ஜாமீன் விதிமுறைகளை மீறிய குற்றவாளிகளின் ஜாமீனை ரத்து செய்து மீண்டும் சிறையில் அடைக்க நடவடிக்கை – காவல் ஆய்வாளர்களுக்குக் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு.

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய எதிரிகள் நீதிமன்றத்தின் மூலம் நிபந்தனை ஜாமீனில் வெளியே வருகின்றனர். அவ்வாறு ஜாமீனில் வெளிவரும் எதிரிகள், நீதிமன்றம் விதித்துள்ள நிபந்தனைகளின்படி சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திலும் நீதிமன்றத்திலும் குறிப்பிட்ட காலத்திற்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும்.

ஆனால், சில எதிரிகள் நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளை முறையாகப் பின்பற்றாமல், ஆஜராக வேண்டிய நாட்களில் ஆஜராகாமல் விதிமுறைகளை மீறி வந்துள்ளனர். இதனைக் கண்காணித்த சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர்கள், நிபந்தனை ஜாமீன் விதிமுறைகளை மீறிய எதிரிகளின் ஜாமீனை ரத்து செய்ய உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இதன் தொடர்ச்சியாக, நீதிமன்றத்தின் மூலம் நிபந்தனை ஜாமீனை ரத்து செய்து, விதிமுறைகளை மீறிய எதிரிகளை மீண்டும் சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

குற்றவாளிகள் நீதிமன்ற நிபந்தனைகளை மீறுவதைத் தொடர்ந்து கண்காணித்து, உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு சிறப்பாகப் பணியாற்றிய காவல் ஆய்வாளர்களின் செயல்பாட்டைப் பாராட்டிய கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள், சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி வெகுவாகப் பாராட்டினார்.

மேலும், குற்றவாளிகளைக் கண்காணித்தல், நீதிமன்ற உத்தரவுகளை முறையாகச் செயல்படுத்துதல் மற்றும் சட்டம் ஒழுங்கைப் பாதுகாத்தல் ஆகிய பணிகளில் காவல்துறையினர் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top