Times of Puducherry
பாரத பிரதம மந்திரி சூரிய வீடு மின்சார திட்ட சிறப்பு முகாம் வரும் 14.10.2026 புதன்கிழமை காலை 10.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை விழுப்புரம் திருச்சி மெயின் ரோடு. பால முருகன் மஹாலில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகம், விழுப்புரம் செயற்பொறியாளர் விநியோகம் விழுப்புரம் சார்பில் நடைபெற உள்ளது.
மேற்படி முகாமில் மின்சார வாரிய அதிகாரிகள், சூரிய மின் தகடு அமைப்பாளர்கள் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டு பொது மக்களுக்கு பாரத பிரமத மந்திரி சூரிய வீடு மின்சார திட்டத்தை பற்றி முழுமையான விளக்கத்தினை அளிப்பத்துடன் விண்ணப்பம் அளிப்பது குறித்தும் தெளிவு படுத்துவார்கள் மற்றும் சூரிய தகடு அமைப்பதற்கான மத்திய அரசின் மானியம் மற்றும் தமிழ்நாடு அரசு தரும் மானியம் ஆகியவை குறித்தும் விளக்கமளிப்பார்கள்.
சூரிய மின் தகடு அமைப்பாளர்கள் பொதுமக்களுக்கு மின் தகடு குறித்தும் அம்மின் தகடுகள் பொருத்துவது மற்றும் அதனுடைய சந்தை விலை குறித்து எடுத்துரைப்பத்துடன் அமைப்பதற்கான இடம் தேர்வு கால அளவு ஆகியவைகள் குறித்து விளக்கமளிக்க உள்ளார்கள் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கி மேலாளர்கள் கலந்து கொண்டு சூரிய மின் தகடு அமைக்க வங்கிகள் மூலம் உடனடி கடன் வசதி, மத்திய மாநில அரசுகளின் மானியம் நுகர்வோரின் வங்கி கணக்கில் நேரடியாக சூரிய திட்ட பணிகள் முடிவுற்ற 7 நாட்களிலிருந்து 30 நாட்களுக்குள் செலுத்தபடும் உத்தரவாதம் ஆகியவைகள் குறித்து பொது மக்களுக்கு விளக்கமளிப்பார்கள்.
மேலும், இத்திட்டம் வரும் மார்ச் 2027ல் முடிவடைவதால் பொதுமக்கள் உடனடியாக இத்திட்டத்தில் விண்ணப்பித்து பயனடைமாறு பொதுமக்களுக்கு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
இத்திட்டத்தினை நுகர்வோர்கள் வீட்டிற்கு பயன்படுத்தினால் அதன் மூலம் வரும் மின் உற்பத்தி மற்றும் நுகர்வோருக்கு குறையும் மின் கட்டணம் ஆகியவைகள் குறித்து சந்தேகங்களை உடனுக்கு உடன் நிவர்த்தி செய்து பயனடைய மின்சார வாரிய அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளார்கள் என்பதை பொது மக்களுக்கு கனிவுடன் தெரவித்துக்கொள்ளப்படுகிறது.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.