Times of Puducherry
புதுச்சேரியில் கடந்த சில மாதங்களாக ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணி நடைபெற்று வந்து கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் நபர்கள் உரிய அடையாள அட்டை இல்லாமல் வீட்டின் உரிமையாளர் அனுமதி இல்லாமல் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணியாளர்கள் ஏதோ ரவுடிகள் போல் குண்டர்கள் போல் பொதுமக்களிடம் பெண்களிடம் பேசி அராஜகப் போக்கில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
அரியாங்குப்பம் பகுதியில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் சில பணியாளர்கள் எந்த ஒரு அடையாள அட்டையும் இல்லாமல் பணியை மேற்கொண்டதால் இதனை சமூக செயற்பாட்டாளர் செல்வராஜ் தட்டி கேட்டு சமூக வலைத்தளங்களில் வீடியோ பதிவிட்டார். பிறகு சம்பந்தமாக அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில் இருவரையும் காவல் நிலையம் அழைத்து பேசும்போது சமூக செயற்பாட்டாளர் செல்வராஜ் , காவல் நிலையத்திற்கு உள்ளே ஒருமையில் பேசி தகாத வார்த்தைகள் பேசி கொலை மிரட்டல் விடுத்த குண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அரியாங்குப்பம் சந்திப்பில் அனைத்து திராவிட கழகத்தினர், சமூக அமைப்புகள் மற்றும் சமூக செயற்பாட்டார்கள் சார்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தி , அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க விட்டால் விரைவில் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.