Times of Puducherry

Seat Matrix மற்றும் கல்விக் கட்டண விபரங்களை சென்டாக் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
16 Oct 2026 • 1:53 AM
seat-matrix-and-education-fees-listed-centac

புதுச்சேரியில் உள்ள மூன்று தனியார் மற்றும் இந்திராகாந்தி அரசு மருத்துவ கல்லூரியில் உள்ள மொத்த முதுநிலை மருத்துவ இடங்களின் எண்ணிக்கை 352 ஆகும். இதில் 50 விழுக்காடுகள் 194 அரசு ஒதுக்கீடாகவும், 50 விழுக்காடுகள் 158 இடங்கள் நிர்வாக ஒதுக்கீட்டின் அடிப்படையிலும் கடந்த கல்வியாண்டில் (2025-2026) சென்டாக் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டது.

இந்த கல்வியாண்டில் (2026-2027) புதுச்சேரியில் உள்ள மூன்று தனியார் மருத்துவ கல்லூரிகளில் மற்றும் இந்திராகாந்தி அரசு மருத்துவ கல்லூரிகளில் 10-க்கு மேற்பட்ட முதுநிலை படிப்பிற்கான இடங்கள் தேசிய மருத்துவ கவுன்சிலால் (NMC ) அங்கீகரிக்கப்படவுள்ளது.

மேலும் ஸ்ரீ மணக்குள விநாயகர் மணக்குள விநாயகர் மருத்துவ கல்லூரி, பிப்ஸ் மருத்துவ கல்லூரிக்கு 2026-2029 கல்வி கட்டணங்கள் கல்விக் கட்டணத் தலைவர் நீதியரசர் விமலா அவர்களால் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கல்வியாண்டில் மூன்று தனியார் மருத்துவ கல்லூரிகள் மற்றும் அரசு மருத்துவ கல்லூரிகள் சற்று ஏறக்குறைய 360 முதுநிலை மருத்துவ இடங்கள் உள்ளன.

இதில் 50 விழுக்காடாக 198 முதுநிலை மருத்துவ இடங்கள் அரசு ஒதுக்கீடாக சென்டாக் கலந்தாய்வின் மூலம் நிரப்பப்பட உள்ளது என
தெரியவருகிறது. இதற்குண்டான Seat Matrix மற்றும் கல்விக் கட்டண விபரங்களை சென்டாக் இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம். இதற்கான அறிவிப்பு ஆணையை சென்டாக் இணையதளத்தில் முறையாக வெளியிட்டு கலந்தாய்வினை காலதாமதமின்றி வெளிப்படை தன்மையோடு,

முதுநிலை மருத்துவ விண்ணப்பங்களை பெற்று, கலந்தாயிவினை MCC விதிமுறை மற்றும் கால அட்டவணைப்படி நடத்திட தங்கள் மேலான கவனத்திற்கு கொண்டு வருகின்றோம். இவ்வாறு மாணவர்கள் மற்றும் பெற்றோர் நல சங்க தலைவர் வை பாலா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top