Times of Puducherry

அரசு மருத்துவமனையில் உயிர் காக்கும் மருந்து தட்டுப்பாடு - வை.பாலா கவர்னருக்கு மனு

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
12 Oct 2026 • 9:35 PM
scarcity-of-life-saving-drugs-in-govt-hospitals-bala

உயிர்காக்கும் மருந்துகள் புதுவை மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளில் இருப்பு இல்லாதது கவலை அளிக்கிறது என மாணவர்கள் மற்றும் பெற்றோர் நல சங்க தலைவர் வை.பாலா புதுச்சேரி துணைநிலை ஆளுநருக்கு கடிதம் கொடுத்துள்ளார் அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:

புதுவை 2026-2027 சுகாதாரத்துறைக்கான ஒதுக்கீட்டை மாண்புமிகு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள நிதி ஒருசில அரசு உயர் அதிகாரிகளின் மெத்தனப்போக்கால், புதுவையில் உயிர்காக்கும் மருந்துகளின் தட்டுப்பாடு புதுவையில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் கிராமப்புற ஆரம்ப சுகாதார மையத்தில் புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய பிராந்தியங்களில் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து பிராந்தியங்களிலும் உள்ள மகப்பேறு மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கு செலுத்தப்படும் தடுப்பூசிகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்பதை தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன். புதுவை சுகாதாரத்துறை மற்றும் மருந்து கட்டுப்பாட்டுத்துறை ஒரு ஆண்டுக்கான மருந்தினை கொள்முதல் செய்து கையிருப்பு வைத்துக்கொள்ள வேண்டும் என்பது விதி, அதேபோல் குறைந்தபட்சம் 3 மாதம் முதல் 6 மாதம் வரை தேவையான மருந்துகளை அவசர கால கையிருப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்
என்பது மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்பநலத்துறையின் விதிமுறைகளாகும்.

இவை அனைத்தும் புதுவை சுகாதாரத்துறையயில் காற்றில் பறக்கவிட்டது. இதன் காரணமாக தற்பொழுது புதுவை மாநிலத்தில் இறப்பு சதவிகிதம் மிக அதிக அளவில் உயர்ந்துள்ளது. ஆகையால் அவர் பணியினை சரிவர செய்யாத சுகாதாரத்துறை அதிகாரிகள் மீது உடனடியாக புதுவை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அக்டோபார் மாதத்தில் 50 வயதிற்கு மேற்பட்டோர்களின் இறப்பு சதவிகிதம் 200-க்கு மேல் சென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஒரு மாதத்தில் காரைக்கால் அரசு மருத்துவமனைகளில் இறப்பு எண்ணிக்கை 35
தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் மாஹே, ஏனாம் பிராந்தியங்களிலும் இறப்பு எண்ணிக்கை கூடியுள்ளது என்பதை தங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். அக்டோபர் மாதம் துவக்கமுதல் சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்தும் இன்சூலின், மற்றும் உயிர் காக்கும் மருந்துகளின் தட்டுப்பாடுகள்
அனைத்து புதுச்சேரி பிராந்தியங்களிலும் தென்படுகிறது. மலேரியா, டெங்கு மற்றும் விஷ காய்ச்சல் புதுவை மாற்றும் காரைக்கால் பிராந்தியங்களில் மழைக்காலம் துவங்குவதற்கு முன்னரே அதிகமானோர் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் சேர்க்கைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் அவரச ஊர்தி (108 ஆம்புலன்ஸ்) பராமரிப்புக்கு போதிய நிதி இல்லாத காரணத்தினால் கடந்த வாரம் மண்ணாடிப்பட்டு அரசு மருத்துவமனையிலிருந்து ஒரு நோயாளியை புதுவை அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரும் வழியில் வண்டியின் டயர் வெடித்ததால், மிகுந்த சிரமத்திற்குள்ளாகப்பட்டு நோயாளியின் நிலமை கேள்விக்குறியாக உள்ளது என்பதையும் தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன். ஆகையால் நிதித்துறை, சுகாதாரத்துறை, மற்றும் குடும்பநல அமைச்சகம் போர்க்கால அடிப்படையில் மருந்து
தட்டுப்பாட்டினை போக்கிட இடைக்கால ஏற்பாட்டினை செய்திட வேண்டும் என்பதை தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top