Times of Puducherry

கல்விச்செல்வத்தை வழங்கும் சரஸ்வதி பூஜைக்கான சிறப்பு ஏற்பாடுகள்

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
18 Oct 2026 • 4:04 PM
saraswathi-pooja-celebrations

திருவாரூர் மாவட்டம் அருகே உள்ள கூத்தனூர் இங்கு சரஸ்வதிக்கு தனியாக கோயில் அமைக்கப்பட்டுள்ளது இது மிகவும் பழமையான கோவில் வருடத்தில் ஒரு நாள் மட்டும் பிறந்த பூஜை செய்யப்படுகிறது. இங்கே அன்னை சரஸ்வதி தேவி ‘கன்னி சரஸ்வதியாக’ வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

இதில் ஒரு சிறப்பு என்னவென்றால் சரஸ்வதி பூஜை அன்று மட்டும் இந்த கோவில் திறக்கப்பட்டது பக்தர்களே சரஸ்வதி அம்மனின் பாதத்தில் மலர் தூவி வணங்கலாம் . சரஸ்வதி பூஜை அன்று இந்த கோவில் திறக்கப்பட்ட அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்து பூக்களால் அலங்கரிக்கப்படுகிறது.

திருவாரூர் மாவட்டம் கூத்தனூரில் உள்ள மகா சரஸ்வதி அம்மன் கோவிலில்தான் சரஸ்வதிக்கு என்றே தனியாக இருக்கும் கோவிலாக இது அறியப்படுகிறது. அன்று எல்லோரும் அர்ச்சனை செய்ய வசதியாக, அம்மனின் பாதம் அர்த்தமண்டபம் வரை நீண்டு இருப்பது போல அலங்காரம் செய்வார்கள்.

மறுநாள் விஜயதசமி. அன்று குழந்தையின் விரலைப் பிடித்து நெல்மணியில் ‘அ’ எழுத வைத்து, படிப்பைத் தொடங்கி வைக்க நிறைய குடும்பங்கள் இங்கே வருவார்கள். பள்ளிக்குச் சேர்க்கும் முன்பாக குழந்தைகளை இங்கு அழைத்து வந்து ஆசி பெற்றுச் செல்வதை மக்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். பள்ளி மாணவர்கள் தாம் தேர்ச்சி பெறவேண்டும் என்று பிரார்த்தனை செய்து தம் தேர்வு எண்களைக் கோயிலில் இங்குகுறித்து வைப்பதும் உண்டு. கலைமகள் தமக்கு கல்விச்செல்வத்தை வழங்குவாள் என்ற நம்பிக்கை இங்குள்ள பக்தர்களுக்கு உள்ளது.

கவிஞர் ஒட்டக்கூத்தர் பாடல் பெற்ற தலம் இது. அவருக்கு இந்த ஊர் தானமாகக் கொடுக்கப்பட்டதால்தான் ‘கூத்தனூர்’ என்று பெயர் வந்தது என்கிறார்கள் . இந்த இரண்டு நாட்களும் கூட்டம் அதிகமாக இருக்கும்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top