Times of Puducherry

சம்பா நெல் பயிர்களை பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீடு செய்ய வேண்டும் - சிபி ஆதித்யா

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
12 Oct 2026 • 3:34 PM
samba-paddy-pm-insurance-scheme-implement-collector

விவசாயிகள் சம்பா நெல் பயிர்களை பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீடு செய்ய வேண்டும் மாவட்ட ஆட்சித்தலைவர்
சிபி ஆதித்யா செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.

எல் நினோ மற்றும் பருவநிலை மாற்றம் காரணமாக இந்தாண்டு பருவமழை குறைய வாய்ப்புள்ளதால், விவசாயிகள் சாகுபடி செய்துள்ள சம்பா நெல் பயிர்களை பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீடு செய்து பயன்பெற வேண்டும். எல் நினோ தாக்கத்தால் பருவமழை குறைந்து வறட்சி ஏற்படும் பட்சத்தில், சம்பா நெல் பயிருக்கு அறிவிக்கப்பட்ட கிராமங்களில் 75 சதவீதத்திற்கும் அதிகமான பரப்பளவில் விதைப்பு செய்ய இயலாமல் போனாலோ அல்லது விதைப்பு செய்யப்பட்ட நெல் விதைகள் முளைக்காமல் பொய்த்துப் போனாலோ, காப்பீடு செய்த விவசாயிகளுக்கு காப்பீட்டுத் தொகையில் 25 சதவீதம் இழப்பீடாக வழங்க திட்ட வழிகாட்டுதலில் வழிவகையுள்ளது.

இந்த இழப்பீட்டைப் பெறுவதற்காக, மாவட்ட அளவிலான வழிகாட்டுதல் குழு, விதைப்பு செய்ய இயலாத அல்லது விதைப்பு செய்யப்பட்ட நெல்
விதைகள் முளைக்காமல் பொய்த்துப் போன கிராமங்களில் உள்ள வயல்களை நேரடியாக ஆய்வு செய்து சமர்ப்பிக்கும் அறிக்கையினை மாவட்ட ஆட்சியர் மூலம் அரசுக்கு பரிந்துரைக்கப்படும். அரசின் ஒப்புதலுக்குப் பின்னர், காப்பீட்டு நிறுவனத்துக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு, தகுதியான விவசாயிகளுக்கு 25 சதவீத இழப்பீட்டுத் தொகை நேரடியாக அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

சம்பா நெல் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.584 பிரீமியம் தொகையாக செலுத்த வேண்டும். பயிர் காப்பீடு செய்வதற்கான கடைசி தேதி 16.11.2026 ஆகும். முளைப்பு பொய்த்துப் போதல் தலைப்பில் இழப்பீட்டு பெற விரும்பினால் சம்பா நெற்பயிர் சாகுபடி செய்த விவாசாயிகள் அனைவரும் பயிர் காப்பீடு செய்து முடித்தபின் காலக்கெடுவினை 15 நாட்களுக்குள் முன்னதாகவே முடித்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. கடன் பெறும் விவசாயிகள், தாங்கள் கடன் பெறும் வங்கிகளில் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பதிவு செய்து கொள்ளலாம். கடன் பெறாத விவசாயிகள் பொது சேவை மையங்கள், வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

பதிவு செய்யும்போது விவசாய அடையாள எண், முன்மொழிவு விண்ணப்பம், சிட்டா, கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டு e-KYC பூர்த்தி செய்யப்பட்ட வங்கிக் கணக்குப் புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும், பிரீமியம் தொகை செலுத்தியதற்கான ரசீதை சரிபார்த்து பெற்றுக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top