Times of Puducherry

வரைவு வாக்காளர் பட்டியல் நவம்பர் மாதம் வெளியீடு தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
22 Oct 2026 • 11:54 AM
voters-draft-list-release-on-12th-nov-ravi prakash

புதுச்சேரியில் வரைவு வாக்காளர் பட்டியல் அடுத்த மாதம் (நவம்பர்) 12-ந் தேதி வெளியிடப்படும் என தலைமை தேர்தல அதிகாரி தெரிவித்துள்ளார். புதுச்சேரி மாநில தலைமை தேர்தல் அதிகாரி ரவிபிரகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிபிருப்பதாவது:

இந்திய தேர்தல் ஆணையம் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கும் 1.1.2027-ஐ தகுதி
நாளாக கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தினை மேற்கொள்ள
உத்தரவிட்டுள்ளது.

அதன்படி அடுத்த மாதம் (நவம்பர்) 2-ந்தேதி வாக்குச் சாவடிகளை முறைப்படுத்துதல், நவம்பர் 12-ந்தேதி ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுதல், நவம்பர் 12-ந்தேதி முதல் டிசம்பர் 11-ந்தேதி வரை கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகளை தாக்கல் செய்தல், டிசம்பர் 28-ந்தேதி கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகள் மீது தீர்வு காணுதல், 4.1.2027 இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடுதல் பணிகள் நடக்கிறது.

இந்த திருத்தப்பணிகளின் ஒருபகுதியாக தகுதியுள்ள அனைவரும், வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவதையும், வாக்காளர் பட்டியல்
துல்லியமாகவும், தற்போதைய விவரங்களுடன் இருப்பதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை மாவட்ட தேர்தல் அதிகாரிகள், வாக்காளர் பதிவு அதிகாரிகள், உதவி வாக்காளர் பதிவு அதிகாரிகள் மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மேற்கொள்வார்கள்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்களின்படி வாக்குச்சாவடிகளை சீரமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்படும். வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாததகுதி உள்ளவர்கள், வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை சேர்ப்பதற்கான 108 விண்ணப்பங்களை சமர்ப்பிக் குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

1.1.2027 அன்று அல்லது அதற்கு முன்பாக 18 வயதை நிறைவு செய்யும் குடிமக்கள், மேற்கண்ட தகுதி நாளின் அடிப்படையில் வாக்காளர்
பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள். மேலும் 1.4.2027, 1.7.2027, 1.10.2027 ஆகிய தேதிகளில் 18 வயதை நிறைவு
செய்து தகுதி பெற உள்ளவர்களும் முன்கூட்டியே விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

வரைவு வாக்காளர் பட்டியல் வாக்காளர் பட்டியலில் பெயர்சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள், படிவம் 6 மூலமாக சமர்ப்பிக்கலாம். வெளிநாடுகளில் வசிக்கும் இந்திய வாக்காளர்கள் படிவம் 6-ஏ மூலமாக சமர்ப்பிக்கலாம். வாக்காளர் தங்களது விண் இணப்பங்களை https://voters.eci.gov.in என்ற வாக்காளர் சேவை இணையதளம் அல்லது ECINEZ செயலி வாயிலாக இணையவழியில் சமர்ப்பிக்க
வேண்டும்.

உதவி சந்தேகங்கள் மற்றும் தேர்தல் தொடர்பான பிற விவரங்களுக்கு 1950 வாக்காளர் உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
ஒருங்கிணைக்கப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் அடுத்த மாதம் 12-ந்தேதி வெளியிடப்படும். ஆட்சேபனை தொடர்ந்து பொதுமக்கள்
தங்களது பெயர் மற்றும் இதர விவரங்களை சரிபார்த்து தேவைப்பட்டால் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் கோரிக்கைகள் அல்லது ஆட்சேபனைகளை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகள் தாக்கல் செய்யும் காலத்தில் அவற்றின் பட்டியல்கள் புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரியின் இணையதளத்திலும், வாக்காளர் பதிவு அதிகாரிகளின் அலுவலகங்கள் வாயிலாகவும் பொதுமக்கள் பார்வைக்கு கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top