Times of Puducherry

கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்கால் பிராந்தியங்களில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
22 Oct 2026 • 11:01 AM
pud-karaikal-schools-declared-holiday-rain-reg

விடுமுறை குறித்த அறிவிப்பு கனமழை காரணமாக, கல்வி அமைச்சரின் அறிவுறுத்தலின்படி, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பிராந்தியங்களில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் இன்று (22.10.2026) விடுமுறை அளிக்கப்படுகிறது.

பள்ளித் தலைவர்கள் அனைவரும் இதனை கவனத்தில் கொண்டு, இதற்கேற்ப செயல்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அதேபோன்று தமிழகத்தில் தென்காசி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, பள்ளிகளுக்கு மட்டும் கனமழை காரணமாக இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது என பள்ளி கல்வி துறை அறிவித்துள்ளதுமழையின் காரணமாக புதுவையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.

ஆனால் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படவில்லை. பள்ளி மாணவர்கள் கல்லூரி மாணவர்கள் ஒரே பேருந்தில். இயக்கப்படுவார்கள். ஆனால் கல்லூரி மாணவர்களை ஏற்றி செல்லும் மாணவர் பேருந்துகள் சில இடங்களில் மாணவர்களை இறக்கி விட்டும் சில இடங்களில் மாணவர்களை ஏற்றாமலும் சென்றதால் மாணவ மாணவியர் பாதிக்கப்பட்டன.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top