Times of Puducherry

RSS நூறாவது விஜயதசமி ஆண்டு நிறைவு விழா மற்றும் 101 துவக்க விழா

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
25 Oct 2026 • 9:44 PM
rss-celebrating-vijayadasami-finishing-year-plus-101-initiating-eve

ராஷ்ட்ரிய சுயம் சேவக சங்கம் (RSS) நூறாவது விஜயதசமி ஆண்டு நிறைவு விழா மற்றும் 101 துவக்க விழா சென்னை சில்க்ஸ் எதிரில் சுயம்செவர்களின் அணிவகுப்பு ஊர்வலம் துவங்கி , அண்ணா சாலை, நேரு விதி, செஞ்சி சாலை வழியாக சென்று கடற்கரை காந்தி சிலை அருகில் நிறைவு பெற்றது.

தொடர்ந்து பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் புதுச்சேரி மாவட்டத் தலைவர் அரவிந்தன் தலைமையிலும் மற்றும் புதுச்சேரி நகர் தலைவர் தாமோதரன் முன்னிலையிலும் நடைபெற்றது. இதில் அறிவு சார் பிரிவின் பொறுப்பாளர் நீலகண்டன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

RSS நூறாவது விஜயதசமி ஆண்டு நிறைவு விழா மற்றும் 101 துவக்க விழா

அப்போது அவர் குறிப்பிடுகையில், பாரத சரித்திரத்தின் நீண்ட நெடிய வரலாற்றையும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு கால தன்னலமற்ற சேவைகளைப் பற்றி எடுத்துரைத்தார். மேலும் எதிர்காலத்தில் இந்த தேசம் உலகின் தலைசிறந்த நாடாக உருவெடுக்க நாட்டுப்பற்றுடன் பொதுமக்கள் நாம் அனைவரும் இணைந்து பாடுபட வேண்டும். அவ்வாறு பாடுபடுவதில் நமக்கு மட்டுமல்ல எதிர்கால இளைஞர்களுக்கு சிறந்த களத்தை நாம் உருவாக்க முடியும் என்று எடுத்துரைத்தார்.

எல்லாவற்றிற்கும் அடிப்படையானது மக்கள் ஒற்றுமையை. அதுவே மக்கள் சக்தி. அதுவே நம் தேசத்தின் சக்தி என்று மிகச் சிறப்பான முன்வைத்தார். இந்த நிகழ்வில் புதுச்சேரி மாவட்ட செயலாளர் செந்தில் விஸ்வநாதன் வரவேற்று பேசினார். மேலும் புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் , ராமலிங்கம் பாராளுமன்ற உறுப்பினர் செல்வகணபதி உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்களும், பொதுமக்கள் ஏராளமான RSS அமைப்பின் சுயம் சேவகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top