Times of Puducherry
குடியிருப்பு வீடு மட்டத்தை விட சாலை உயர்வதற்கு எதிரான இன்று சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் “கேளு TN கேளு” என்ற போராட்டத்தை அறப்போர் இயக்கம் நடத்தியது அரசு செவி சாய்க்கும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்தனர்.
இப்போராட்டத்திற்கு அறப்போர் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன், இணை ஒருங்கிணைப்பாளர் ஜாஹிர் ஹுசைன், ராதாகிருஷ்ணன், மதுவந்தி ஆகியோர் சாலை உயர பாதிப்புகள் குறித்து பேசியதாவது:
தமிழ்நாடு முழுவதும் சாலைகளின் உயரம் தொடர்ந்து அதிகரிப்பதால், வீடுகள் சாலை மட்டத்தை விடப் பள்ளத்தில் சென்றுவிடும் தீவிரப் பிரச்சினையை அறப்போர் இயக்கம் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியிட்ட அறிக்கையின் மூலம் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தது.
அதன் தொடர்ச்சியாக, இன்று சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் “கேளு TN கேளு” என்ற போராட்டத்தை நடத்தியதுஇப்போராட்டத்தில் தமிழ்நாடு முழுவதிலுமிருந்து பொதுமக்கள், சாலை உயர்வால் பாதிக்கப்பட்டவர்கள், அறப்போர் இயக்கத் தன்னார்வலர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பங்கேற்றனர்.
சென்னை, கிருஷ்ணகிரி, கோவை, திருப்பத்தூர், ஈரோடு, மதுரை மற்றும் பல மாவட்ட மக்கள் கலந்துகொண்டு, சாலை உயர்வால் தாங்கள் எதிர்கொள்ளும் இன்னல்களை, சாலை உயரம் அதிகரிப்பதற்கு எதிரான மக்கள் இயக்கமாக இதை தொடர்ந்து அரசுக்கு எடுத்துரைக்கும் வகையில் இன்று ஒரு துண்டறிக்கையை வெளியிடப்பட்டு அனைவருக்கும் வழங்கினார்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள உள்ளாட்சித் துறை, ஊரக வளர்ச்சி துறை மற்றும் மாநில நெடுஞ்சாலை துறை அலுவலர்களை (சாலைப் பணிகளை மேற்கொள்ளும் துறை சார்ந்த அலுவலர்களை) நேரில் சந்தித்து, இந்தத் துண்டறிக்கையை வழங்கி,
“இனிமேல் சாலையின் உயரத்தை அதிகரிக்காமல் சாலைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்” என்று கோரிக்கை விடுக்க வேண்டும் என அறப்போர் இயக்கம் கேட்டுக்கொண்டனர். புதிய சாலை அமைக்கும்போது பழைய சாலையைச் அடியோடு சுரண்டி எடுக்க வேண்டும் (Milling) என்ற விதியை ஒப்பந்ததாரர்கள் தொடர்ந்து மீறுவதே இப்பிரச்சினைக்கு முக்கியக் காரணம்.
இதனால், ஒவ்வொரு முறையும் புதிய தார்ச்சாலை போடப்படும்போது சாலையின் உயரம் கூடிக்கொண்டே செல்கிறது. அதன் விளைவாக வீடுகள் பள்ளத்தில் சென்று விடுகின்றன. சாலைகள் மேடாகிவிட்டதால், மழை பெய்தால் சாலைகளில் ஓடும் தண்ணீரும் சாக்கடை நீரும் நேரடியாகப் பள்ளத்தில் உள்ள வீடுகளுக்குள் புகுந்துவிடுகிறது.
சாலைகள் மட்டம் உயர்த்துவதால், பாதாள சாக்கடை மூடிகள் (manholes) பள்ளமாகி ரோட்டின் நடுவே குழிகள் போல மாறிவிடுகின்றன.இதில் சிக்கி இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர். வீடுகளுக்குள் தண்ணீர் புகுவதைத் தடுக்க, மக்கள் தங்கள் வீட்டின் தரைத்தளத்தை உயர்த்த பல லட்ச ரூபாய் (ரூ. 40 லட்சம் வரை) செலவு செய்ய வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.
மக்களின் வீடுகள் பாழாவது மட்டுமின்றி, உயர்ந்த சாலைக்கு ஏற்ப மீண்டும் நடைபாதைகள், பாதாள சாக்கடை மூடிகள், மின்சாரப் பெட்டிகள் போன்றவற்றை உயர்த்துவதற்காக அரசு மீண்டும் அதற்காக ஒப்பந்தங்களை கோருகிறது. இதனால் மக்களின் வரிப்பணம் மிகுந்த அளவில் வீணாக்குகிறது.
போராட்டத்தில் மூலம் அறப்போர் இயக்கம் இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் . மேலும் கட்டாயமாக பழைய சாலையைத் தோண்டுதல். புதிய தார்ச்சாலையின் அளவிற்கு பழைய சாலை தோண்டப்பட வேண்டும் என்ற விதி டெண்டரில் இருக்க வேண்டும். சாலை உயரம் ஏறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
சாலையின் உயரத்தை (MSL) அளந்து குறியீட்டுக் கல் நட வேண்டும். வேலைக்கு முன்பும் பின்பும் அளவீட்டுப் புத்தகத்திலும் (MBook) இணையத்திலும் பதிவிட வேண்டும் . சாலை தோண்டப்படும் ஆழம் மற்றும் சாலை போடுவதற்கு முன்பும் பின்பும் உள்ள உயர அளவீடுகளை காணொளி மற்றும் புகைப்பட ஆதாரங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
விதிகளின் படி சாலை தோண்டப்படாமல் உயரம் ஏறினால் ஒப்பந்ததாரருக்கு பணம் வழங்கக் கூடாது. மக்கள் வரிப்பணத்தை வீணடித்ததற்காக ஒப்பந்ததாரர் மற்றும் அதிகாரிகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இனிமேல் சாலை உயர்த்தப்பட்டு பாதிப்படையும் ஒவ்வொரு வீட்டிற்கும் சதுர அடி அடிப்படையில் அரசு ரூ.40 லட்சம் வரை இழப்பீடு வழங்க வேண்டும் . பிரதான சாலையின் உயரத்தை காலப்போக்கில் படிப்படியாக குறைத்து உட்புறச் சாலைகளின் பழைய மட்டத்தை மீட்டெடுக்க வேண்டும்
ஏற்கனவே சாலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள வீடுகள் மற்றும் சாலைகளுக்குத் தீர்வு காண அரசு உடனடியாக ஒரு நிபுணர் குழுவை அமைக்க வேண்டும். இந்த போராட்டத்தில் அறப்போர் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன், இணை ஒருங்கிணைப்பாளர் ஜாஹிர் ஹுசைன், ராதாகிருஷ்ணன், மதுவந்தி ஆகியோர் சாலை உயர பாதிப்புகள் குறித்து பேசினர்.
சாலை உயரம் ஏறாத வண்ணம் மேற்கண்ட கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற கோரிக்கை வைத்தனர். தமிழ்நாடு அரசின் சாலை போடும் ஒவ்வொரு துறையும் இது குறித்து உடனடியாக ஆணைகள் பிறப்பிக்கவும் கோரிக்கை வைத்தனர். மக்கள் படும் இன்னல்களையும், சந்திக்கும் பொருளாதார இழப்பையும், பருவமழைக் காலங்களில் அவர்கள் அனுபவிக்கும் வேதனையையும் தமிழ்நாடு அரசு உணர்ந்து, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.