Times of Puducherry

புதுச்சேரியில் தேங்கும் மழைநீரை உடனடியாக வெளியேற்ற கூடுதல் மோட்டார் பம்புகளை இயக்க அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் உத்தரவு

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
25 Oct 2026 • 8:54 PM
operating-additional-motor-pumps-drainout-stagnant-water-immediately-malladi

தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்குவதைத் தடுக்க நிரந்தரத் தீர்வு காணவும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்.

வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக புதுச்சேரியின் நகர்ப்புறங்கள் மற்றும் கிராமப்புறங்களில் பரவலாக விட்டு, வீட்டு மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நகரின் தாழ்வான பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.

புதுச்சேரியில் தேங்கும் மழைநீரை உடனடியாக வெளியேற்ற கூடுதல் மோட்டார் பம்புகளை இயக்க அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் உத்தரவு

இதையடுத்து, அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கனுடன் இணைந்து மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மழைநீர் தேங்குவதற்கான காரணங்கள் மற்றும் அவற்றை விரைவாக வெளியேற்றுவதற்கானத் நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

இதனைத் தொடர்ந்து, சட்டப்பேரவை வளாகத்தில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்கள் ஸ்ரீநிவாசன், ஸ்ரீநிவாஸ்ராம் மற்றும் உதவிப் பொறியாளர் பாலாஜி ஆகியோருடன் அமைச்சர் ஆலோசனை நடத்தினார்.

இந்தக் கூட்டத்தின்போது, தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை உடனடியாக வெளியேற்றுவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று அமைச்சர் அறிவுறுத்தினார். தற்போது பயன்பாட்டில் உள்ள மோட்டார் பம்புகளுடன் கூடுதலாக மோட்டார் பம்புகளையும் இயக்கி, தேங்கியுள்ள மழைநீரை விரைவாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

மேலும், மழைநீர் தேங்கும் பகுதிகளைத் தொடர்ந்து கண்காணித்து, பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

ஒவ்வொரு மழைக்காலத்தின்போதும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்குவதால் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்கும் வகையில், மழைநீர் வடிகால்களைச் சீரமைத்தல், நீர்வழிப் பாதைகளில் உள்ள அடைப்புகளை அகற்றுதல் உள்ளிட்ட நிரந்தரத் தீர்வுகளுக்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து உரிய திட்டங்களைத் தயாரிக்க வேண்டும் என்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.

மழைநீர் தேங்கும் பகுதிகளில் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், எதிர்காலத்தில் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படாமல் தடுப்பதற்கான நிரந்தரத் தீர்வுகளை உருவாக்குவதிலும் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என அமைச்சர் வலியுறுத்தினார்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top