Times of Puducherry

வடகிழக்கு பருவமழைமாநகராட்சி மேயர் கள ஆய்வு

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
25 Oct 2026 • 4:50 PM
trichy-mayor-inspected-rain-affected-area

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் திருச்சியில் கடந்த நான்கு தினங்களாக விட்டு விட்டு மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி குளம் போல் காட்சியளித்தது, பல இடங்களில் சுரங்கப் பகுதிகளில் நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

இந்த நிலையில், திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட  மழைநீர் அதிக அளவு தேங்கக் கூடிய  கிராப்பட்டி, அன்பு நகர், கே.கே. நகர், காஜாமலை, ரோடு, எஸ்பிஜி கல்யாண மண்டபம் சாலை, கொல்லாங்குளம் செல்லும் வாய்க்கால் ஆகிய இடங்களை மாநகராட்சி பொறியாளர்களுடன் மாநகராட்சி மேயர் அன்பழகன் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வடகிழக்கு பருவமழைமாநகராட்சி மேயர் கள ஆய்வு

இந்த ஆய்வின்போது மாநகராட்சி மேயர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது ; மாநகராட்சி  பொறியாளர்கள், சுகாதார அலுவலர் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், பணியாளர்கள் ஆகியோர் கொண்ட குழு சாலைகள் மற்றும் பொது இடங்களில் தேங்கியுள்ள தண்ணீர்களை மோட்டார் பம்புகள் மூலமும், மனித ஆற்றல் மூலமும்  உடனுக்குடன் விரைவாக அகற்றி வருகின்றார்கள்.

 மழைக்காலத்தில் தண்ணீர் தேங்குவதைத் தடுக்கவும், தேங்கி நிற்கும் மழைநீரை விரைவாக அகற்றவும், மாநகராட்சி ஐந்து மண்டலங்களிலும் பொறியாளர்கள் மற்றும் சுகாதார அலுவலர்கள் ,சுகாதார ஆய்வாளர் தலைமையில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, தண்ணீர் தேங்குவதைத் தடுக்க   தினசரி ஆய்வுகளை மேற்கொண்டு, மழைநீர் வடிகால்களை சுத்தம் செய்கின்றனர்.

ஐந்து மண்டலங்களிலும் உள்ள  தாழ்வான பகுதிகள் தண்ணீர் தேங்கும் இடங்களைக் கண்டு மழைநீர் விரைவாக வெளியேற்றப்பட்டு வருகிறது. 

குறிப்பாக சுரங்கப்பாதைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள நீரை அகற்றுமாறு குழுக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு மழைநீர் வடிகால்களை மாநகராட்சி பணியாளர்கள் சுத்தம் செய்து வருகின்றனர் .

கனமழையின் போது, ​​மோட்டார்களைப் பயன்படுத்தி தேங்கியுள்ள நீரை அகற்ற பணியாளர்கள் இரவு பகலாக  ஈடுபடுத்தப்படுகிறார்கள். மேலும், பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை பிரச்சனைகளை உடனுக்குடன் செய்து கொடுக்குமாறு அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளேன் என்றார்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top