Times of Puducherry
திருவெறும்பூர் அருகே கஞ்சா வைத்திருந்த இரண்டு பேரை திருவெறும்பூர் போலீசார் கைது செய்ததோடு அவர்களிடமிருந்து 23 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். இது குறித்த விபரம் வருமாறு:
திருவெறும்பூர் இன்ஸ்பெக்டர் யோகரத்தினம் தலைமையிலான போலீசார் காட்டூர் பகுதியில் வாகன தனிக்கையில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகப்படும் படியாக இரண்டு நபர் டிராவல் பேக்கை இழுத்துச் சென்றனர். அவர்களை அழைத்து விசாரித்தபோது முன்னுக்கு பின் முரனாக பேசியுள்ளனர்.
பின்னர், அவர்கள் வைத்திருந்த ட்ராவல் பேக்கை சோதனை செய்து பார்த்தபோது அதில் கஞ்சா இருப்பது தெரியவந்தது. அதன் அடிப்படையில் அவர்கள் இருவரையும் கைது செய்து விசாரித்தபோது சேலம் வாழப்பாடி மின்னாம்பள்ளி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த செல்வம் மகன் பிரபு (32), கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டம் மாலூர் தாலுக்கா துறையைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் குமரன் (55) என்பதும் தெரியவந்தது.
அதன் அடிப்படையில், வழக்கு பதிவு செய்ததோடு மேலும் அவர்களிடமிருந்து 23 கிலோ, 290 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து, வழக்கு பதிந்து, அவர்கள் இருவரையும் திருச்சி 6வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிபதி உத்தரவின் பேரில் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.