Times of Puducherry
தீபாவளிக்கு மறுநாள் திங்கட்கிழமை தமிழக அரசு பொதுவிடுமுறை அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:
தமிழர்களின் முக்கிய பண்டிகையான தீபாவளி பண்டிகை நவம்பர் 8 தேதி ஞாயிறு கொண்டாடப்படுகிறது, மறுநாள் திங்கட்கிழமைநவம்பர் 9 திங்கள் அரசு பொதுவிடுமுறை அறிவித்துள்ளது.
நவம்பர் 8 தீபாவளி கொண்டாடப்படும் நிலையில் நவம்பர் 9 திங்கட்கிழமை மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று தீபாவளி கொண்டாடிவிட்டு திரும்ப வசதியாக நவம்பர் 9ம் தேதி பொதுவிடுமுறை அறிவித்துள்ளது.
நவம்பர் 9ம் தேதி பொதுவிடுமுறையை ஈடு செய்ய நவம்பர் 28 சனிக்கிழமை அரசு அலுவலகங்கள் பணிநாளாக செயல்படும் என்று செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளனர்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.