Times of Puducherry

சீரழியும் இளைஞர்களை மீட்க பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் பின்பற்ற வேண்டும் - நித்தியேஷனந்தா சுவாமி

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
2 Oct 2026 • 5:10 PM
ramakrishna madam-new branch

சினிமா, அரசியல், மற்றும் சமூக வலைதளங்களால் சீரழியும் இளைஞர்களை மீட்க வேண்டும் என்றால் பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் பின்பற்ற வேண்டும் அப்போதுதான் சிறந்த சமுதாயத்தை உருவாக்க முடியும் என்று புதுச்சேரி ராமகிருஷ்ணா மடம் பொறுப்பாளர் நித்தியேஷனந்தா சுவாமி தெரிவித்தார்.

புதுச்சேரி கருவடிகுப்பத்தில் சுமார் 18,609 சதுர அடி நிலப்பரப்பில் சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ணா மடத்தின் புதிய கிளை மடம் நிறுவப்பட்டுள்ளது. இதில் ஸ்ரீ ராமகிருஷ்ணர் கோவில், அன்னை சாரதா இல்லம், மற்றும் சேவை மைய கட்டிடம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன, கோயிலில் தினமும் காலை மங்களாராத்தி மாலை ஆரத்தி, பூஜைகள், வேத மந்திர உச்சாடனம், விசேஷ பூஜைகள், பஜனைகள் மற்றும் ஆன்மீக சொற்பொழிவுகள் நடைபெற உள்ளது. அன்னை சார்ந்த இல்லத்தில் சாதுகளுக்கான தங்கும் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன தரைதளத்தில் சமையல் அறையுடன் சாதுக்கள் மற்றும் பக்தர்களுக்கான தனித்தனி உணவகமும் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது இதன் திறப்பு விழா நடைபெற உள்ளது.

இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி ராமகிருஷ்ண மடத்தில் பொறுப்பாளர் சுவாமி நித்தியேஷனந்தா:

புதுச்சேரி ராமகிருஷ்ண மடத்தின் கிளை வருகிற பத்தாம் தேதி நடைபெற உள்ளதாகவும் இதில் துணைநிலை ஆளுநர் கைலாசநாதன், முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் ராமகிருஷ்ண மடம் மற்றும் மிஷனின் தலைவர் ஸ்ரீமத் சுவாமி கௌதமானந்த ஜி மகராஜ் ஆகியோர் கலந்து கொண்டு திறந்து வைக்க உள்ளதாக தெரிவித்தார்.

சினிமா, அரசியல், மற்றும் சமூக வலைதளங்கள் உள்ளிட்ட பல்வேறு பழக்க வழக்கங்களால் சீரழியும் இளைஞர்களை மீட்க வேண்டும் என்றால் பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் பின்பற்ற வேண்டும், பாரம்பரியத்தை கடைபிடித்தால் நாடு முன்னேறும் நல்ல மாணவர்களை உருவாக்க முடியும் என்றார். வேறுபாடுகள் நிறைந்தது தான் இயற்கை எல்லாமே ஒன்றாக தான் இருக்க வேண்டும் என்று நினைத்தால் இயற்கையை நின்று விடும் அந்த வேறுபாட்டில் ஒற்றுமை காண்பது தான் ஆன்மீகம் என்று தெரிவித்தார்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top