Times of Puducherry

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் 2

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
16 Oct 2026 • 1:14 AM
rajinikanth's-movie-release-fans-celebration

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தயாராகியுள்ள படம் ஜெயிலர் 2. கடந்த 2023-ம் ஆண்டு வெளியாகி உலகளவில் வசூலில் சாதனை படைத்த ஜெயிலர் படத்தின் 2-ம் பாகமாக தயாராகியுள்ள இந்த படத்தில், முதல் பாகத்தில் நடித்த ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், மிர்னா மேனன், மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெரப் ஆகியோர் அதே கேரக்டரில் நடித்திருக்கின்றனர்.

எஸ்.ஜே.சூர்யா, வித்யா பாலன், சூரஜ் வெஞ்சிரமூடு உள்ளிட்ட பலர் புதிதாக இந்த படத்தில் இணைந்து நடித்துள்ளனர் ஜெயிலிர் படத்தின் முதல் பாகத்தை இயக்கிய இயக்குனர் நெல்சன் திலீப் குமாரே, ஜெயிலர் 2 திரைப்படத்தை இயக்கியுள்ளார், சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. 165 நிமிடங்கள் ஓடும் இத்திரைப்படத்திற்கு தணிக்கை வாரியம் U/A 16+ சான்றிதழ் வழங்கியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் 2

தமிழ்நாட்டில் , புதுச்சேரியிலும் ஜெயிலர் திரைப்படம் காலை 9 மணிக்கு முதல் காட்சி தொடங்கியது கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் படம் அதிகாலை காட்சி திரையிடப்படபட்டது.

2026-ன் மிகப்பெரிய வெற்றிப்படமாக விஜய்யின் கடைசி படமான ‘ஜனநாயகன்’ அமைந்தது, அதைத் தொடர்ந்து சூர்யாவின் ‘கருப்பு’ திரைப்படம் இடம் பெற்றது; ஆனால் இந்த இரண்டு படங்களாலும் ரூ.350 கோடி வசூல் எல்லையைக் கடக்க முடியவில்லை.

இதன் மூலம் 2026-ஆம் ஆண்டில் இதுவரை எந்தவொரு தமிழ் படமும் பாக்ஸ் ஆபீஸில் பெரிய சாதனைகளைப் படைக்காததால், ஆயுதபூஜை விடுமுறை தினத்தை முன்னிட்டு இன்று (அக்டோபர் 15) வெளியாகியுள்ள ஜெயிலர் 2 திரைப்படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய தமிழ் ரிலீஸாக இருக்கும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. 

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top