Times of Puducherry

பனையூரில் ஜோசப் விஜய் ராகுல் காந்தி சந்திப்பு

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
10 Oct 2026 • 9:53 AM
rahul-vijay-meet-plus-students-meet

10 ஆயிரம் மாணவர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இன்று சென்னை வருகை தரும் ராகுல் காந்தி முதல்-அமைச்சர்
விஜய்யை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து பேசுகிறார்.

‘மாணவர்களின் குரல்” நிகழ்ச்சி ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் தொடங்கி, மராட்டிய மாநிலம் புனே மற்றும் நாசிக் நகரங்கள், மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூர் போன்ற இடங்களில் ‘மாணவர்கள் குரல்’ நிகழ்ச்சி நடத்திய ராகுல்காந்தி, இன்று (சனிக்கிழமை)சென்னையில் உள்ள தீவுத் திடலில் மாணவர்கள் முன்னிலையில் பேசஇருக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

பனையூரில் ஜோசப் விஜய் ராகுல் காந்தி சந்திப்பு

சென்னை தீவுத்திடலில் ராகுல்காந்தி பங்கேற்கும் ‘மாணவர்கள் குரல்’ நிகழ்ச்சி ஏற்பாடுகளை தமிழ்நாடு காங்கிரஸ் மாநில தலைவர்
மாணிக்கம் தாகூர் பார்வையிட்டார். முதல்-அமைச்சருடன் சந்திப்பு மாணவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இன்று மதியம் 12.30 மணிக்கு சென்னை விமான நிலையம் வருகை தரும் ராகுல்காந்தி, முதல்-அமைச்சர் விஜய்யை அவரது இல்லத்தில் (நீலாங்கரையில்
மதியம் 1.30 மணிக்கு) சந்திக்கிறார். பின்னர், சென்னை தீவுத்திடலில் நாளை மாலை 5 மணியளவில் நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பங்கேற்கும் ‘மாணவர்களின் குரல்’ நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இதற்காக தமிழ்நாடு முழுவதும்
இணையதளம் மற்றும் கியூ.ஆர். கோடு மூலம் நடத்தப்பட்ட மாணவர்கள் பதிவில் ஒருலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். அவர்களில், 10 ஆயிரம் பேருக்கு அட்டை வழங்கப்பட்டு அவர்கள் மட்டுமே பங்கேற்க உள்ளனர். ராகுல்காந்தி கலந்து கொள்ளும் மாணவர்கள் நிகழ்ச்சிக்காக பிரமாண்ட பந்தல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பனையூரில் ஜோசப் விஜய் ராகுல் காந்தி சந்திப்பு

மேலும், குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகளும் உரிய முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள், முன்னாள் கல்லூரி முதல்வர்கள் என முக்கியமான நபர்கள் 350 பேருக்கு மட்டும் இருக்கை அமைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் இருந்து ஏராளமான கல்லூரிகளில் இருந்து மாணவ-மாணவிகள் கலந்து கொள்ள உள்ளனர். மாணவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வரும் ராகுல்காந்தி தாஜ் கன்னிமாரா ஓட்டலில் காங்கிரஸ் நிர்வாகிகள் உள்ளிட்ட முக்கிய அரசியல் பிரமுகர்களை சந்திக்கிறார்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top