Times of Puducherry

"புதுவை கவசம்" என்ற பெயரில் போலீசார் தீவிர வாகன சோதனை

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
10 Oct 2026 • 9:44 AM
puduvai kavasam-implemented-puducherry-navasivayam

புதுவையில் கடந்த மாதம் அடுத்தடுத்து கொலைகள் நடந்தது. இதையடுத்து உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமையில் நடந்த சட்டம்-ஒழுங்கு குறித்த கூட்டத்தில் இரவு நேர ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டார்.

அதன் எதிரொலியாக இரவு ரோந்து பணியை தீவிர படுத்தவும் சமூக விரோத செயல்களை தடுக்கவும் ‘புதுவை கவசம்’ என்ற பெயரில் நேற்று இரவு தீவிரரோந்து பணிமேற்கொள்ளப்பட்டது.

"புதுவை கவசம்" என்ற பெயரில் போலீசார் தீவிர வாகன சோதனை

இதில் அனைத்து போலீஸ் நிலைய எல்லைகளிலும் போலீஸ் உயர் அதிகாரிகள்தலைமையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டனர். சீனியர் போலீஸ் சூப்பிரண்டு கலைவாணன் வில்லியனூர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார்.

"புதுவை கவசம்" என்ற பெயரில் போலீசார் தீவிர வாகன சோதனை

தொடர்ந்து நகரின் பல்வேறு இடங்களுக்கு சென்று நேரில் ஆய்வு செய்தார். புதுவை நகரின் பல்வேறு பகுதிகளில் போலீசார் வாகன சோதனையிலும், தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டனர். அப்போது சந்தேக நபர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top