Times of Puducherry
புதுச்சேரி விடுதலை தின விழா வரும் 01.11.2026 அன்று கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, விழாவிற்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், அரசுச் செயலர் (செய்தி மற்றும் விளம்பரம்) திரு. முகமது அஹ்சன் அபித், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (14.10.2026) தலைமைச் செயலகக் கருத்தரங்கக் கூடத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், புதுச்சேரி விடுதலை தின விழாவைச் சிறப்பாக நடத்துவதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாட்டுப் பணிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
செய்தி மற்றும் விளம்பரத்துறை இயக்குநர் திரு. T. சுதாகர் அவர்கள், விழாவிற்கான ஏற்பாடுகள் மற்றும் பல்வேறு துறைகள் சார்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து விளக்கிக் கூறினார்.
இக்கூட்டத்தில், காவல் கண்காணிப்பாளர் (கிழக்கு) திருமதி ஸ்ருதி S. எரகட்டி, இ.கா.ப., மற்றும் காவல்துறை, பொதுப்பணித்துறை, தீயணைப்புத் துறை, நலவழித்துறை, சுற்றுலாத்துறை, கலை மற்றும் பண்பாட்டுத்துறை, பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை, வேளாண்துறை, புதுச்சேரி நகராட்சி, விடுதலைப் போராட்ட வீரர்கள் பிரிவு, முப்படை நலத்துறை, தேசிய மாணவர் படை உள்ளிட்ட தொடர்புடைய துறைகளின் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்தி மற்றும் விளம்பரத்துறை உதவி இயக்குநர் முனைவர் K.குலசேகரன், மக்கள் தொடர்பு அதிகாரி R. வசந்தன் ஆகியோர் செய்திருந்தனர்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.