Times of Puducherry

விலையில்லாத் தையல் இயந்திரத்தை அமைச்சர் ஆனந்த் வழங்கினார்

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
27 Oct 2026 • 1:37 AM
free-sewing-machine-distributed-by-minister-anand

சென்னை, தியாகராய நகர் சட்டமன்ற உறுப்பினரும், ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சருமான N.ஆனந்த் தியாகராய நகர் தொகுதி மக்களின் தேவைகளை அறிந்து, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளைத் தொடர்ந்து வழங்கி வருகிறார்.

அந்த வகையில், தியாகராய நகர் லலிதாபுரம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், தாங்கள் சுயதொழில் தொடங்கி, அதன் மூலம் நிலையான வருமானம் ஈட்டி, குடும்பத்தின் பொருளாதார நிலையை மேம்படுத்திக்கொள்ள உதவிடுமாறு அமைச்சர் அவர்களிடம் கோரிக்கை வைத்திருந்தனர்.

விலையில்லாத் தையல் இயந்திரத்தை அமைச்சர் ஆனந்த் வழங்கினார்

பொதுமக்களின் கோரிக்கையைப் பரிசீலித்த அமைச்சர் அவர்கள், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும், சுயமாகத் தொழில் செய்து பொருளாதார முன்னேற்றம் அடைவதற்கும் உதவும் வகையில், விலையில்லாத் தையல் இயந்திரத்தை வழங்கினார். இதன் மூலம், தையல் தொழிலில் ஈடுபட்டு வருமானம் ஈட்ட விரும்பும் பயனாளிகள் தங்களது தொழில் முயற்சியை முன்னெடுத்துச் செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும், லலிதாபுரம் பகுதியில் வசிக்கும் 400-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் அவர்கள் வழங்கினார். பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை அறிந்து, அவர்களின் கோரிக்கைகளுக்குத் தீர்வு காண்பதுடன், தேவைப்படும் மக்களுக்கு உரிய உதவிகளை வழங்குவதன் மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதே இத்தகைய மக்கள் நலப் பணிகளின் முக்கிய நோக்கமாகும்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top