Times of Puducherry

மக்கள் குறை தீர்ப்பு நாள்

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
10 Oct 2026 • 6:45 PM
public-grievances-redressal-day-headed-by-dig

புதுச்சேரி டி ஐ ஜி பி சத்திய சுந்தரம் தலைமையில் நடந்த மக்கள் குறை தீர்ப்பு நாளில் 38 மனுக்கல் பெறப்பட்டு 21 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.

புதுச்சேரி காவல் துறை டிஜிபி அறிவுறுத்தலின்படி, புதுச்சேரியில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் மக்கள் குறைதீர்ப்பு நாள்
இன்று நடத்தப்பட்டது. உருளையான்பேட்டை காவல்நிலையத்தில், DIGP (L&O) சத்தியசுந்தரம், மற்றும் SP(East) ஸ்ருதி S யாரகட்டி, கிழக்கு பகுதி காவல் ஆய்வாளர்கள் மற்றும் துணை காவல் ஆய்வாளர்களுடன், பொதுமக்களின் புகார்களை பெற்று நடவடிக்கை எடுத்தனர்.

பாகூர் காவல்நிலையத்தில், SSP(L&O) தR. கலைவாணன், தெற்கு பகுதி காவல் ஆய்வாளர்கள் மற்றும் துணை காவல்
ஆய்வாளர்களுடன், பொதுமக்களின் புகார்களை பெற்று நடவடிக்கை எடுத்தார். புதுச்சேரி போக்குவரத்து காவல்நிலையங்களில், SSP(Traffic) திவ்யா D, மற்றும் SP(Traffic-NE) ரச்னா சிங், போக்குவரத்து காவல் ஆய்வாளர்களுடன் போக்குவரத்து சம்பந்தமான குறைகளை கேட்டு நடவடிக்கை எடுத்தனர்.

திருக்கனூர் காவல்நிலையத்தில், SP(West) அனுராக் சோப்ரா, மற்றும் தன்வந்திரி நகர் காவல்நிலையத்தில், SP(North) வம்சீதர ரெட்டி தங்கள் பகுதி காவல் ஆய்வாளர்கள் மற்றும் துணை காவல் ஆய்வாளர்களுடன், பொதுமக்களின் புகார்களை பெற்று நடவடிக்கை எடுத்தனர்.

இதேபோன்று, யானம் பகுதியில் SP(Yanam) வரதராஜன், மற்றும் மஹே பகுதியில் SP(Mahe) . தனசேகரன், பொதுமக்களின் குறைகளை கேட்டு நடவடிக்கை எடுத்தனர். சைபர் கிரைம் காவல்நிலையத்தில், ஆய்வாளர் கீர்த்திவர்மன், சைபர் கிரைம் சம்பந்தமான குறைகளை பொதுமக்களிடம் கேட்டு நடவடிக்கை எடுத்தார்.

மூத்த அதிகாரிகள் நேரில் கலந்துகொண்டு 38 புகார்களை பொதுமக்களிடம் கேட்டறிந்து, அதில் 21 புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்தனர். இன்று நடைபெற்ற குறைதீர்ப்பு கூட்டத்தில் மொத்தம் 128 பொதுமக்கள் (21 மகளிர்) கலந்துகொண்டனர்.

பெரும்பாலான புகார்களுக்கு அந்த இடத்திலேயே தீர்வு காணப்பட்டு, பொதுமக்களுக்கு உடனடி நிவாரணத்தை உறுதி செய்தனர்.
நிலுவையில் உள்ள புகார்களுக்கு விரைவாக நடவடிக்கை எடுப்பதற்காக காவல் நிலைய அதிகாரிகளுக்கு (SHOs) மூத்த அதிகாரிகள் தெளிவான வழிகாட்டுதல்களை வழங்கினர்.

இந்த நிகழ்ச்சி வருங்காலங்களில் ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 11:00 மணி முதல் பிற்பகல் 01:00 மணி வரை தொடர்ந்து நடைபெறும்,
அப்போது காவல்துறை மூத்த அதிகாரிகள் தங்கள் அதிகார வரம்பில் உள்ள ஒரு காவல் நிலையத்திற்குச் சென்று பொதுமக்களின் புகார்களை நேரடியாகக் கேட்டு தீர்வு காண்பார்கள்.

மேலும் கூடுதல் உதவிக்கு, பொதுமக்கள் அந்தந்த காவல் நிலையங்களைத் தொடர்பு கொள்ளலாம்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top