Times of Puducherry

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் மனுக்கள் பெறும் முகாம்

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
14 Oct 2026 • 9:10 PM
public-grievance-redressal-camp-cud-sp-office

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வாரந்தோறும் புதன்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய இரு நாட்களிலும் பொதுமக்களிடமிருந்து குறைதீர் மனுக்கள் பெறப்பட்டு, அவற்றின் மீது உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று புதன்கிழமை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. விவேகானந்த சுக்லா, ஐபிஎஸ்., அவர்கள் பொதுமக்களிடமிருந்து நேரடியாக மனுக்களைப் பெற்று, அவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.

தொடர்ந்து, பெறப்பட்ட மனுக்களின் தன்மைக்கேற்ப சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளுக்கு உரிய விசாரணை மேற்கொண்டு விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். மேலும், பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது காலதாமதமின்றி நடவடிக்கை எடுத்து, அவர்களின் குறைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என அறிவுறுத்தினார்.

காவல் துறையின் விசாரணைக்கு உட்பட்ட புகார்களில், சட்டப்படி வழக்குப் பதிவு செய்ய வேண்டிய நிலை இருந்தால் உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், சிவில் தொடர்பான பிரச்சினைகளில் சம்பந்தப்பட்டவர்கள் உரிய நீதிமன்றத்தை அணுகி சட்டப்படி தீர்வு பெறுவதற்கான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இந்த மனுக்கள் பெறும் முகாமில், கடலூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோட்டீஸ்வரன், துணைக் காவல் கண்காணிப்பாளர் ரகுபதி மற்றும் காவல் ஆய்வாளர்கள் உடனிருந்தனர்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top