Times of Puducherry
எஸ்.ஐ.ஆர் குளறுபடிக்கு காரணமான தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் உடனடியாகப் பதவி விலக வேண்டும் மற்றும் அவரை கைது செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மக்கள் கலை இலக்கிய கழகம், ஜனநாயக தொழிலாளர் முன்னணி சார்பில் திருச்சி தில்லைநகர் பகுதியில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முன்னதாக, தில்லைநகரில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை பேரணியாக செல்ல முயன்ற அமைப்பினருக்கு காவல்துறை அனுமதி மறுத்தது. இதனைத் தொடர்ந்து, தில்லை நகர் பகுதியில் திரண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் எஸ்.ஐ.ஆர் குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் உடனடியாகப் பதவி விலக வேண்டும், அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும், தேர்தல் ஆணையத்தின் பிற ஆணையர்களும் தங்களது பதவிகளைப் ராஜினாமா செய்ய வேண்டும், 2023-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட தேர்தல் ஆணையர் நியமனம் தொடர்பான சட்டத்தை உடனடியாக ரத்து செய்துவிட்டு, பழைய சட்ட நடைமுறையையே மீண்டும் அமல்படுத்த வேண்டும், மின்னணு வாக்குப்பதிவு முறையைக் கைவிட்டு, மீண்டும் பழைய வாக்குச்சீட்டு அடிப்படையிலான தேர்தல் முறையை கொண்டு வர வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.