Times of Puducherry

மின்வெட்டுக்கு போர்க்கால அடிப்படையில் தீர்வு காண வேண்டும் - அன்புமணி இராமதாஸ்

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
12 Oct 2026 • 4:27 PM
power cut-permanent-solution-anbumani ramadoss

தமிழக அரசு தலைமைச் செயலகத்தின் முதல் தளத்தில் இன்று காலை ஏற்பட்ட மின் தடை காரணமாக அமைச்சர்கள் அலுவலக அறைகள் இருளில் மூழ்கின. இது தொடர்பான காணொலிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன. தமிழ்நாடு முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள மின்வெட்டு தமிழக அரசின் அதிகார பீடமான தலைமைச் செயலகத்திலும் பாதிப்பை ஏற்படுத்தியிருப்பது கவலையளிக்கிறது.

தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத மின்வெட்டு கடந்த ஒரு மாதத்திற்கும் நீடித்து வருகிறது. மின்வெட்டால் பாதிக்கப்படாத பகுதிகளே இல்லை எனும் அளவுக்கு தமிழகத்தின் அனைத்து ஊர்களிலும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அமைச்சர்கள் பங்கேற்ற நிகழ்ச்சிகளில் ஏற்பட்ட மின் தடை இப்போது தலைமை செயலகம் வரை சென்றிருப்பது நிலைமை மோசமடைந்திருப்பதையே காட்டுகிறது. இந்த நிலைமை உடனடியாக சரி செய்யப்பட வேண்டும்.

தமிழ்நாட்டின் மின் தேவைக்கும், மின்சாரம் கிடைப்பதற்கும் பெரும் இடைவெளி காணப்படுவது தான் மின்வெட்டுக்கு காரணம். இதை சமாளிக்க முதலில் 2000 மெகாவாட்டும், பின்னர் 4500 மெகாவாட்டும் மின்சாரம் கொள்முதல் செய்யப்படுவதாக அரசு தெரிவித்தது. அதன் பிறகும் மின் வெட்டும், மின் தடையும் தொடர்வது ஏன்?

மின்வெட்டு அனைத்துத் தரப்பினரையும் கடுமையாக பாதிக்கும் தன்மை கொண்டது. அதனால், தமிழ்நாட்டில் நிலவி வரும் மின்வெட்டுக்கு தீர்வு காணவேண்டும்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top