Times of Puducherry

புதுச்சேரி பாண்லே நிறுவனத்தில் நாள் ஒன்றுக்கு 2 லட்சம் லிட்டர் பால் பதப்படுத்தும் ஆலை துவக்கம்

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
12 Oct 2026 • 6:58 PM
ponlait-dairy-processing-unit-in progress

புதுச்சேரி பாண்லே நிறுவனத்தில் நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் லிட்டரில் இருந்து 20 ஆயிரம் லிட்டர் ஐஸ்கிரீம் உற்பத்தி செய்யும் கட்டுமான பணிகளின் வேலைகளும் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. பாண்லே மேலாண் இயக்குனர் மற்றும் நிர்வாக அதிகாரி இவர்களின் தொடர் முயற்சியால் புதுச்சேரி பாண்லே நிறுவனத்தில் நாள் ஒன்றுக்கு 2 லட்சம் லிட்டர் பால் பதப்படுத்தும் ஆலை துவக்கம்.

ஆலை துவங்குவதற்கு உறுதுணையாக இருந்த பாண்லே மேலான் இயக்குனர் மற்றும் நிர்வாக அதிகாரிக்கு ஊழியர்கள் மனதாரப் பாராட்டு.

புதுச்சேரியில் அரசு துறையான பாண்லே நிறுவனம் மக்களின் ஆதரவோடு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் பாண்லே நிறுவனம் மேலும் மக்களுக்கு சிறப்பான சேவை செய்ய வேண்டும் என்கின்ற எண்ணத்தில் நாள் ஒன்றுக்கு 2 லட்சம் லிட்டர் பால் பதப்படுத்தும் ஆலை அமைக்கும் பணியை துவங்குவதற்கான பணியில் ஈடுபட்டது.

பாண்லே மேலாண் இயக்குனர் வடிவேல் முருகன், மற்றும் நிர்வாக அதிகாரி வெங்கடேசன் ஆகியோரின் சீரிய முயற்சியால் ஊழியர்களின் கனவாக இருந்த இந்த ஆலை கட்டும் பணி விரைவில் துவங்கப்பட உள்ளது. இந்த 2LLPD திட்டமானது என்பது வெறும் திட்டம் மட்டும் அல்ல பாண்லே ஊழியர்களின் நீண்ட நாள் கனவாகும்.

மக்களுக்கு பயனுள்ள இந்த திட்டத்தை துவக்குவதற்கும் தேவையான நிதியை பெறுவதற்கும் பாண்லே மேலாண் இயக்குனரும், நிர்வாக அதிகாரி இருவரும் பெரும் முயற்சிகள் மேற்கொண்டு வந்தனர். அதனைத் தொடர்ந்து இத்திட்டத்தை சீரமைப்பது குறித்து NDDB குழுவுடன் தேவையான அனுமதிகளை பெறுவதற்கு NPDD அதிகாரிகளுடனும் தொடர்ச்சியான பேச்சு வார்த்தைகளை மேற்கொண்டனர். இப்போது இரு அதிகாரிகளின் முயற்சியாலும் பேச்சுவார்த்தையாலும் புதுச்சேரி கவர்னர் கைலாசநாதன், முதல்வர் ரங்கசாமி கனிவான அனுமதியுடன் NDDB அதிகாரிகள் பாண்லே அதிகாரிகள் இருவர்கள் முன்னிலையில் கடந்த வாரம் சேவை ஒப்பந்தத்தில் கையெழுத்தானது.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top