Times of Puducherry

பாலியல் குற்றங்களால் பாதிக்கப்படும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக Support Person, Translator, Interpreter நியமனம்

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
13 Oct 2026 • 7:25 PM
pocso-support-person-appointment-collector

பாலியல் குற்றங்களால் பாதிக்கப்படும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக Support Person, Translator, Interpreter நியமனம் செய்ய உள்ளதால் விருப்பமுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன மாவட்ட ஆட்சித்தலைவர்சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

பாலியல் குற்றங்களால் பாதிக்கப்படும் குழந்தைகளை பாதுகாப்பு (போக்சோ) சட்டத்தின் 39 ஆம் பிரிவின்படி, குழந்தைகளுக்கு உதவும் பொருட்டு, கடலூர் மாவட்டத்தில் Support Person, Translator, Interpreter நியமனம் செய்ய உள்ளதால், கீழ்காணும் தகுதியின் அடிப்படையில் விருப்பமுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சமூகப்பணி, சமூகவியல், சட்டம், உளவியல், குழந்தைகள் வளர்ச்சி (அ) குழந்தைகள் நலன், சுகாதாரம் ஆகிய கல்வி தொடர்பான துறையில் முதுநிலை பட்டம் பெற்றவர்கள் அல்லது குழந்தைகள் நலன் சார்ந்த கல்வியில் பட்டம் பெற்று மூன்று வருட அனுபவம் உள்ள நபர்கள். மேற்காணும் பணிகளுக்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களின்  ஆவணங்களுடன் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, எண். 312, இரண்டாவது தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கடலூர்-607 001 என்ற அலுவலகத்திற்கு 06.11.2026 தேதிக்குள் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top