Times of Puducherry
புதுச்சேரி அரசின் மின்துறை சார்பில், மத்திய அரசின் PM Surya Ghar: Muft Bijli Yojana திட்டத்தின் கீழ், ‘சேவா சேது’ மாபெரும் சூரிய சக்தி முகாம் 2026 மற்றும் புதுச்சேரி மாநில அரசின் மானியத் தொகை வழங்கும் விழா நடைபெற்றது.
இவ்விழாவில், 3,333 பயனாளிகளுக்கு தலா ரூ.30,000 வீதம், மொத்தம் ரூ.10 கோடி மதிப்பிலான புதுச்சேரி அரசின் மானியத் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு உள்துறை அமைச்சர் திரு. ஆ. நமச்சிவாயம் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்து, பயனாளிகளுக்கு மானியத் தொகைக்கான காசோலைகளை வழங்கினார்.
இந்நிகழ்வில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.