Times of Puducherry
புதுச்சேரி நேரடி நியமணத்தின் மூலமாக தேர்வு செய்யப்பட்ட உடற்கல்வி ஆசிரியர்கள் 33 பேருக்கு, முதல்வர் ரங்கசாமி பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
புதுச்சேரி பள்ளிக் கல்வித் துறையின் கீழ் நேரடி நியமனத்திற்காக, 38 உடற்கல்வி ஆசிரியர் பதவிக்கு, 14 பெண்கள் மற்றும் 19 ஆண்கள் என மொத்தம் 33 நபர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
இவர்களுக்கான பணி நியமன ஆணை வழங்கிடும் நிகழ்ச்சி, சட்டசபை வளாகத்தில் நடந்தது. முதல்வர் ரங்கசாமி, புதுச்சேரியில் 25, காரைக்காலில் 5, மாகேவில் 3 என மொத்தம் 33 உடற்கல்வி ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். அமைச்சர்கள் நமச்சிவாயம், ராஜசேகரன் மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.