Times of Puducherry

மல்லாடி கிருஷ்ண ராவைச் சந்தித்த PATH சங்க நிர்வாகிகள்

எழுதியவர்: News contributor
1 நிமிட வாசிப்பு
14 Oct 2026 • 11:01 PM
PATH-union-members-met-mulladi

புதுச்சேரியின் தொழில் வளர்ச்சி மற்றும் சுற்றுலாவை மேம்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை பாண்டிச்சேரி சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் சங்கத்தினர் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவை சந்தித்து அளித்தனர்.

புதுச்சேரி சுற்றுலாத்துறையின் வளர்ச்சி மற்றும் பயண முகவர்களின் தொழில் முன்னேற்றத்தை வலியுறுத்தி, பாண்டிச்சேரி சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் சங்கத்தின் (PATH) தலைவர் கருணாகரன், செயலாளர் எட்வர்ட், பொருளாளர் பாரி உள்ளிட்ட நிர்வாகிகள் சட்டப்பேரவையில்
சுற்றுலாத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ண ராவைச் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.

இந்தச் சந்திப்பின்போது, புதுச்சேரி சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கும், பயண முகவர்களின் முன்னேற்றத்திற்கும் அமைச்சர் மல்லாடி கிருஷ்ண ராவ் அளித்து வரும் ஆதரவுக்கு PATH சங்க நிர்வாகிகள் தங்களது நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள பயண முகவர்களின் நலன், தொழில் வளர்ச்சி மற்றும் சுற்றுலாத்துறையின் மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட பல்வேறு அம்சக் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அமைச்சரிடம் அளித்தனர் மேலும் கோரிக்கைகளைப் பரிசீலித்து உரிய ஆதரவும், தேவையான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் உறுதியளித்தார்.

NEWSLETTER & ALERTS

முக்கியச் செய்திகள் — உங்கள் கைபேசிக்கே

தினமும் காலை 7 மணிக்குச் சுருக்கமான செய்தித் தொகுப்பு. இலவசம், எப்போது வேண்டுமானாலும் நிறுத்தலாம்.

Scroll to Top